எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தருமபுரி, பிப் 12- தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழக தலைவரும் பெரியார் பெருந் தொண்டருமான இராமியம் பட்டி ஆர்.வி.சாமிக்கண்ணு அவர்கள் (வயது 90) உடல்நல குறைவு காரணமாக தருமபுரி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2.2.2-018 அன்று காலை 9.30 மணியளவில் மருத்து மனையில் மறைவுற்றார். அவ ருடைய உடல் இராமியம்பட் டியில் உள்ள பண்ணை இல் லத்தில் வைக்கப்பட்டு பொது மக்கள், கழக தோழர்கள் உற வினர்கள் மரியாதை செலுத்தி னர்.

கழகம் சார்பில்

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் வீரவணக்க உரையில் அறிவிக்கப்பட்ட தைப்போல கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் சாமிக்கண்ணு உடலுக்கு கழக கொடியை போர்த்தி மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

அவரது இல்ல வளாகத்தில் இரங்கல் கூட்டம் பழனி புள் ளையண்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுப்பி வைத்திருந்த வீரவணக்க உரையை பொதுமக்களுக்கு படித்துகாட்டி இரங்கலுரை யாற்றினார். மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் வேட் ராயன், மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், தமிழ்பிரபாகரன், சேலம் மாந கர செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார், மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் பெரு.முல்லையரசு, முன்னாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, ஒன்றிய செயலாளர் தனசேகரன், அதிமுக சார்பில் பசுவராஜ், திமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் நாகராஜ், பூதநத்தம் இளங்கோ, ஆசிரியர் மு.சிவக்குமார் ஆகியோர் வீர வணக்க உரையாற்றினார்.

இறுதி நிகழ்வில் மாவட்ட ப.க. தலைவர் கதிர்.செந்தில், துணைத் தலைவர் இர.கிருட்டி ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் மு.மனோகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னதுரை, தரும புரி நகர தலைவர் மு.பரமசி வம், ப.க.அமைப்பாளர் மணி வேல், ப.க.ஆசிரியரணி தீ.சிவாஜி, சிந்தல்பாடி தலைவர் காந்தி, தாதனூர் தலைவர் இராஜா, ஒன்றிய அமைப்பாளர் குருபர அள்ளி இளங்கோ, திமுக நிர்வாகிகள் குருபர அள்ளி பெ.அன்பழகன், இரா ஜேந்திரன், அதிமுக பண்டேரி நாதன், மெனசி திராவிடன், பாப்பிரெட்டிபட்டி ஆசிரியர் அசோக்குமார், ஆசிரியர் கவு ரன்மற்றும் ஊர்பொதுமக்கள் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

மரண சாசனம்

அய்யா சாமிக்கண்ணு இறப் பதற்கு முன் எழுதிவைத்திருந்த மரண சாசனப்படி அவரது உடலுக்கு ஜாதி, மத, ரீதியான சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் கழக தோழர்கள் உடலை சுமந்து சென்று அடக் கம் செய்து வீரவணக்கம் முழக் கமிட்டனர். அய்யாவின் வாழ் விணையருக்கு அம்மாள், மகள் மலர், மகன் ஆசிரியர் சிற்றரசு ஆகியோருக்கு தோழர்கள் ஆறு தல் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner