எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வேதாரண்யம் மேனாள் சட்டமன்ற - மயிலாடுதுறை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.இராஜேந்திரன், மேனாள் வேதை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பி.வி.குழந்தைவேல் ஆகியோரது தாயார்   பி.வி.பத்மாவதி அம்மாள் 13.2.2018 இரவு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருக்கு வயது 90.

இவரது வாழ்விணையர் கருப்பம்புலம் பி.வெங்கடாசல தேவர் தமிழ்நாடு சட்டப்பேரவை, மேலவை உறுப்பி னராகவும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஜில்லா போர்டு துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். இவரது குடும்பம் இன்னும் நமது இயக்கத்தின் மீது கொண்டுள்ள பற்றுக்கு சான்று, திருச்சி சிறுகனூர் பெரியார் சிலை அமைப்புக்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் தவணையாக கொடுத்துள்ளது என்று திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.முருகையன்

தெரிவித்துக் கொள்கிறார். கழகத் தலைவர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner