எழுத்துரு அளவு Larger Font Smaller Font


* புதுச்சேரி நகராட்சி திராவிடர் கழக அமைப்பாளர் மு.குப்புசாமி அவர்களின் தாயாரும், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.இரஞ்சித்குமார் அவர்களின் பாட்டியுமான ப.எல்லம்மாள் (வயது 96) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.

மறைவு செய்தியறிந்து புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ப.எல்லம்மாள் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். இறுதி நிகழ்வில் புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் அறிவழகன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் (புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம்) மு.ந.நடராசன்,, ப.க. செயலாளர் நெ.நடராசன், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, இரா.விலாசினி, புதுச்சேரி மகளிரணித் தலைவர் அ.எழிலரசி, புதுச்சேரி  மகளிரணித் தலைவர் அ.எழிலரசி புதுச்சேரி நகர அமைப்பளார் மு.ஆறுமுகம், வில்லியனூர் கொம்யூன் கழகத் தலைவர்  கரு.சி.திராவிடச் செல்வன், உழவர் கரை நகர அமைப் பாளர்  ஆ.சிவராசன், அ.இ.அ.தி.மு.க. மருத்துவர் அணி டாக்டர் கலைச்செல்வி, டாக்டர் கு.இராஜ்குமார், கழக மகளிரணி தில்லையம்மாள் குப்புசாமி, எல்மையம்மாளின் மரு மகள் வசந்தா கன்னியப்பன், மகள்கள் கன்னியம்மாள் காத்த வராயன், இலட்சுமி இராமலிங்கம், பேரப்பிள்ளைகள் க.அசோக் குமார், க.அனந்தகுமார், மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner