எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எமது பெருமரியாதைக்கும், நன்றியறிதலுக்கும் உரியவரான தமிழ் ஆய்ந்த அரும் பெரும் புலவர், பேராசிரியர் லெ.பெ.கரு.இராமநாதன் செட்டியார் அவர்கள் தனது 104ஆம் வயதில், சென்னையில் கடந்த 14.4.2018 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினோம்.

நிறைவு வாழ்வு வாழ்ந்துதான் மறைந்துள்ளார் என்றாலும், அவர் நுண்மாநுழைபுலம், இலக்கியத்தில் ஆழ்ந்த செறிவும், புலமையும் நிறைந்த மேதையாவார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் (ளிக்ஷீவீமீஸீtணீறீ) கீழ்திசைப் பிரிவு, கலைகள் பிரிவு, ஆராய்ச்சிப் பிரிவு என்று முப்பெரும் துறைகள் தனித்தனியே இயங்கின - நாங்கள்

மாணவர்களாக இருந்து படித்த போது!

தமிழ்க் கலைப்பிரிவுத்துறைக்குத் தலைவராக செந்தமிழ்க் காவலர் டாக்டர் “ஏ.சி.செட்டியார்” என்று அழைக்கப்பட்ட ஏ.சிதம்பரநாதன் செட்டியாரும், ஓரியண்டல் பிரிவுக்கு மாபெரும் புலவர், லெ.பெ.கரு.இராமநாதன் செட்டியாரும், ஆராய்ச்சித் துறைக்கு ஜி.சுப்ரமணியப் பிள்ளை அவர்களும் தலைவர்களாக இருந்து தொண்டு புரிந்தனர்.

ஆங்கிலம் அதிகம் அறியாதது ஒரு ஆற்றலாளரின் திறமையையோ, ஆளுமையையோ ஒரு போதும் பாதிக்காது - மேதைகளாக இருப்பதற்கு என்பதற்கு லி.றி.ரி.ஸி.அய்யா ஓர் தலைசிறந்த எடுத்துக்காட்டு.
அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதியின் துணைக் காப்பாளராக இருந்த போதுதான், எமக்கு அதற்கு முன் திறக்கப்படாத பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கதவுகள் திறந்தன.

அந்நன்றி எமக்கு என்றும் உண்டு.

அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது மகன் திரு. பனையப்பன் மற்றும் குடும்பத்தவர்களுக்கு எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர் போற்றும் அந்நல்லாசிரியருக்கு எமது தலை தாழ்ந்த வீரவணக்கம்!

கி.வீரமணி
பழைய மாணவர்
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: நேற்று (24.4.2018) செய்தி கிடைத்தது; பேராசிரியர் சுப.திண்ணப்பன் மூலமாக! எனவே தான் காலந்தாழ்ந்த நிலையில் இரங்கல் செய்தி விடுக்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner