எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம்: கழகதோழர் அன்னையார் மறைவு உடற் கொடை வழங்கப்பட்டது

குடியாத்தம், ஏப். 27- குடியாத்தம் திராவிடர் கழக தோழர் ஓவியர் சிவா அவர்களின் தாயார்  க. பெரியநாயகி அவர்கள் 24.4.2018 செவ்வாய் கிழமை இயற்கை எய்தினார். அவரின் விழிக் கொடை  வேலூர் சி.எம்.சி. மருத் துவமனைக்கு வழங்கப்பட் டது. 25.4.2018 புதன்கிழமை காலை 10 மணிக்கு அம்மை யாரின் உடல் எந்த சடங்குகள் செய்யாமல் அம்மருத்துவ மனைக்கு உடற் கொடை வழங்கப்பட்டது. குடியாத்தம் அண்ணல் அம்பேத்கர் சிலை எதிரே வழங்கப்பட்டது.

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இர. அன்பரசன்,  மாவட்ட இளை ஞரணி தலைவர் ந.கண்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி, நகர தலைவர் வி. மோகன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக் குமார், நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, நகர மகளிர் பாசறை செயலாளர் இர.உஷா நந்தினி, நகர மாணவரணி செய லாளர் ம.ஜ.சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner