எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சரவணகுமார் அவர்களின் தாயார் மரகதம் பச்சையப்பன்
(வயது 70) உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று
(5-5-2018) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தி அறிந்து மீனம்பாக்கம் ஏர் இந்தியா குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள அம்மையாரின் உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மலர் மாலை வைத்து  மரியாதை செலுத்தினார். உடன்  பெரியார் திடல் மேலாளர்

ப.சீதாராமன், வடசென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்  சோ.சுரேஷ், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி,  அ. அம்பேத்கர், அருள், லோகேஷ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.  மறைவு செய்தி அறிந்து கழகத் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரவணகுமார் மற்றும் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்தார். அம்மையாருக்கு ஒரு மகனும், மூன்று மகளும் உள்ளனர். இறுதி ஊர்வலம்  இன்று (6.5.2018) காலை 10 மணி மீனம்பாக்கத்தில் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner