எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தா. நாகராசன் மறைவு

சேலம் மாநகர் கழக மாவட்டம், மாநகர் குகை பகுதி கருங்கல்பட்டி (கிளை) கழகத் தலைவரும் தந்தை பெரியார் அவர்களின் மீதும் நம்மீதும், மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் கொண்ட வரும், கழகம் நடத்திய பல்வேறு போராட் டங்களில் எல்லாம் கழக மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது பங்கு கொண்டவரும் சேலம் மாநகர் குகை பகுதியில் கழக தோழர் இராவணன் அவர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றிய வரும் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் வசித்தபோது பள்ளிப்பாளையம் தோழர்கள் பொன்னுச்சாமி, கைத்தறி கதிர்வேல் ஆகியோருடன் கழகப் பணிகள் செய்தவருமான தா. நாகராசன்  அவர்கள் (வயது 85)  நேற்று (13.5.2018) மறைவுற்றார். அவருக்கு சொர்ணம் என்கின்ற வாழ்விணையரும்,  நா. மனோகரன், நா. ரவி, நா. சற்குணம், நா. விஜயேந்திரன், நா. திருவாசகம் ஆகிய மகன்களும்,  நா. ஜெயமணி, நா. சாந்திமுரளிதரன் ஆகிய மகள்களும் உள்ளனர்.

85 வயதிலும் கொள்கை உறுதியிலும், இயக்க நடப்பிலும் நீங்கா இடம் பெற்ற முதுபெரும் பெரியார் தொண்டருக்கு நமது வீர வணக்கம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை14.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner