எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், மே 21- சேலம் மாநகர் மாவட்டம், சேலம் குகை பகுதி கருங்கல்பட்டி (கிளை) திராவிடர் கழக தலைவர் தா. நாகராசன் (வயது 85) அவர்கள் 13.5.2018 அன்று மாலை 5 மணி யளவில் சேலம் கருங்கல்பட்டி யில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இது குறித்து தகவல் அறிந்த வுடன் சேலம் மாவட்ட கழகத் தலைவர் கி.ஜவகர், மாவட்ட அமைப்பாளர் ச.வெ.இராவண பூபதி ஆகியோர் இறுதி மரி யாதை செலுத்தினர். இது குறித்த தகவல் கழகத் தோழர்களுக்கு அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து மறுநாள் (14.5.2018) நாமக்கல் மாவட்டம் சார்பாக பள்ளிபாளையம் தோழர் பொன் னுசாமி, ஆத்தூர் மாவட்டம் சார்பாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் சுரேஷ், சேலம் மாவட்ட கழ கம் சார்பாக மாவட்ட செயலா ளர் கடவுள் இல்லை கி.சிவக் குமார், துணைத் தலைவர் அம் மாபேட்டை தனபால், சேலம் மாநகர கழகம் சார்பாக மாநக ரத் தலைவர் பூ.வடிவேல், மண்டலச் செயலாளர் அ.ச. இளவழகன், மேட்டூர் மாவட் டம் சார்பாக மண்டலச் தலை வர் கவிஞர் சிந்தாமணியூர் சி. சுப்பிரமணியன், ஓமலூர் ஒன் றிய கழகத் தலைவர் சவுந்திரம் ஆகியோரும் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

தலைமை கழகத்தின் சார் பாக மேனாள் தலைமைச் செயற் குழு உறுப்பினரும் பெரியார் அறக்கட்டளை உறுப்பினரு மான பழநி.புள்ளையண்ணன் இறுதிமரியாதை செலுத்தினார்.

முன்னதாக இது குறித்த தகவல் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு, அவ ரும் தலைமை கழகத்தின் சார் பாக தனது இரங்கலை அன்னா ரின் குடும்பத்தாரிடம் தொலை பேசி மூலம் பதிவு செய்தார். மேலும் இது குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் விடுதலையில் வெளியிடப் பட்ட இரங்கல் அறிக்கை நகல் எடுக்கப்பட்டு இறுதி நிகழ்ச்சி யில் பங்கு கொண்ட உறவினர்க ளுக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப் பட்டது. பொதுமக்களும், கழ கத் தலைமைக்கும் அவரிடம் உள்ள கொள்கை உறவை பாராட்டி நெகிழ்ந்தனர்.

மேலும் மாவட்ட கழகம் சார்பாக அன்னாரின் மறைவு குறித்து கருங்கல்பட்டி பகுதி யில் முக்கிய இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்து வீரவணக்க அறிவிப்பு செய்யப்பட்டது.

மாலை 3 மணிக்கு நடை பெற்ற இரங்கல் கூட்டத்திலும் மேற்கண்ட தோழர்கள் பங் கேற்று இரங்கலுரை நிகழ்த்தி னார்கள். இரங்கலுரைக்கு பின் கழக முறைப்படி கழக மரியா தையுடன் அன்னாரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு சேலம் மரவனேரியில் உள்ள மாநக ராட்சி மின் மயானத்தில் எரி யூட்டப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner