எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலை மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவரின் தந்தையார் ஜி.பாண்டுரங்கன் (75) நேற்று காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம். சரோஜா என்ற மனைவியும், மகன் வெங்கட் ராமன், மருமகள் மைதிலி, மகள் கலை வாணி ஆகியோர் உள்ளனர். மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணை தலைவர்  சா.கிருட்டிணன் தலைமையில், தண்டராம்பட்டு நகர தலைவர் மாசிலாமணி, திருவண்ணாமலை நகர செயலாளர் மு.காமராஜ், தண்டராம்பட்டு ப.க.ஒன்றிய தலைவர் சசிகுமார், திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை ஆகியோர் கலந்து கொண்டு  அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு மாவட்ட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ், பாமக  முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டியன்,அதிமுக தேவேந்திரன், மதிமுக தொண் டரணி சம்பத், சின்னபையன், செல்வகுமார் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner