எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரபலதொழிலதிபரும், 'எம்.ஜி.எம்.' என்ற புகழ் பெற்ற சுற்றுலா ஈர்ப்பு மய்ய நிறுவனரும், சிறந்த மனிதநேயருமான செவாலியர் எம்.ஜி.எம். முத்து (வயது 83) அவர்கள் இயற்கையெய்தினார் என்பது மிகவும் துயரத்தினைத் தரும் செய்தியாகும்!

உழைப்பினால் உயரலாம் என்பதற்கும், எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்வில் மீண்டும் எழுந்து வரலாறு படைக்கலாம், மக்களை வாழ வைக்கும் வள்ளல் ஆகலாம் என்பதற்குமான தத்துவங்களுக்கும் உருவகம் அவர்!

இனிய சுபாவத்திற்குச் சொந்தக்காரரான அவரது வரலாறு - இன்றைய இளைய தலைமுறைக்கு பாடமும், தகுதியும் படைத்ததாகும்!

துன்பம் துளைத்தபோதும் அவர் துவண்டதில்லை. அவர் கம்பீரமாக எழுந்தார் -  உயர்ந்தார் - சிறந்தார்.

இதில் அவரது வாழ்விணையரான அம்மையாருக்குத் தான் பெரும் பங்கு! உண்மையில் வாழ்க்கைத் துணையாளர் அவர்! அவரது அத்தனை மக்களின் வளர்ச்சிக்கு இவரது பங்கும் தொண்டும் அளப்பரியன.

திராவிடர் கழகத்தில் அவர் ஆரம்ப கால - ஏரல் பகுதியில் அவர் வாழ்ந்தபோது  - உறுப்பினராக இருந்ததை அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்!

அவரது தொண்டறத்தை பெரியார் திடலுக்கு அழைத்துப் பாராட்டி அவருக்குப் பெருமை சேர்த்ததின் மூலம் நாம் பெருமை பெற்றோம்.

உயர்ந்த பண்பாளரை இந்த சமூகம் இழந்தது! அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கு குறிப்பாக அவரது வாழ்விணையர் அம்மா அவர்களுக்கும், மகன்கள், மகள், மருமகன், மருமகள்கள், குடும்பத்தவர் அனைவருக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும்!

எம்.ஜி.எம். எனும் அவருக்கு தகுந்த நினைவுச் சின்னம்! உழைப்பின் வெற்றி  அடையாளம்!

சென்னை      தலைவர்,

25.5.2018         திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner