எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரும், காடுவெட்டி என்ற ஊரைச் சார்ந்த திரு. குருநாதன் என்ற குரு அவர்கள் தனது 58ஆம் வயதில் நேற்று (மே.25) சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

இருமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அவர், அவரது வட்டாரத்தில் தனிச் செல்வாக்குடன் திகழ்ந்தவர். சிற்சில நேரங்களில் அதீதமான மேடைப் பேச்சுகளால் பல வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டவர் என்றாலும், அவரது தலைமைக்கும், கட்சிக் கும் கடுமையாக உழைத்தவர்.

அவரது மறைவால் வாடும் பா.ம.க. தலைவர் மருத்துவர்

திரு. இராமதாஸ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அவரது இயக்க நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி, திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

சென்னை      தலைவர்,

26.5.2018                                       திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner