எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டுப்பாளையம் நகர கழக தலைவர் கோ.அர.பழனிசாமி அவர்களின் தாயார் ஆர்.ரங்கம் மாள் (வயது 76) 5.6.2018 செவ்வாய் காலை 5 மணிக்கு மறைவுற்றார். ரங்கம்மாளின் உடலுக்கு கோவை மண்டல செயலாளர் சந்திரசேகர், கோவை மாவட்ட தலைவர் சிற்ற ரசு, வழக்குரைஞர் சென்னியப் பன், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறு முகம், பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன், மேட்டுப்பாளையம் மாவட்ட செயலா ளர் அர.வெள்ளிங்கிரி, மேட்டுப் பாளையம் அமைப்பாளர் செல்வ ராசு, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் த.வீரமணி, இளைஞர் அணி மாவட்ட தலை வர் நந்தகுமார், மேட்டுப்பாளை யம் அரங்கசாமி, மேட்டுப்பாளை யம் மாவட்ட ப.க. தலைவர் கே.அரங்கசாமி, செயலாளர் திரு வள்ளுவன், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன், மேடூர் முருகேசன், குட்டைப் புதூர் நாராயணன், வழக்குரைஞர் பாண்டியன், காரமடை ஒன்றிய தலைவர் ஏ.எம்.ராஜா, மாவட்ட துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம் உட்பட ஏராளமான கழகத்தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன், கழகப்பொது செயலாளர் ஜெயக் குமார் ஆகியோர் தொலை பேசி யின் மூலமாக தங்களின் இரங்லை தெரிவித்துக் கொண்டனர். மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. மறைந்த ரங் கம்மாள் அவர்களது மகன் கோ. அர.பழனிசாமி தொடர்ந்து பதி னைந்து ஆண்டுகளாக விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு கழக ஏடுகளுக்கு முகவராகவும், மேட்டுப்பாளையம் நகர தலைவ ராகவும் இருந்து வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner