எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டஎரிப்பு வீரரும், பெரியார் பெருந்தொண்ட ருமான திருவானைக்காவல் முத்துக்குமாரசாமி (88) உடல் நலக்குறைவால் இன்று (ஜூன் 8) மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைந்த முத்துக்குமாரசாமி அவர்களின் உடலுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ்  தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில்   மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ், மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், சிறீரங்கம் நகர தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், காட்டூர் கனகராஜ், சங் கிலிமுத்து, ராஜேந்திரன், தேவா, அண்ணாதுரை சீனிவாசன், அய்க் கிய ஜனதா தளம் ஹேமநாதன் உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழக  தோழர்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

மறைந்த பெரியார் பெருந் தொண்டர் முத்துக்குமாரசாமி உடல் கொடை செய்ய பதிவு செய் திருந்தார். அதன்படி இன்று 12 மணிக்கு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு உடற்கொடை வழங்கப் பட்டது. மறைந்த முத்துக் குமார சாமி அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner