எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூலை 3- புதுச்சேரி மாநில திராவிடர் கழக மேனாள் தலைவர் மறைந்த சுயமரியா தைச் சுடரொளிகள் மு.துரை சாமி - அனுசுயா துரைசாமி ஆகியோரின் மகன் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் துரை.முனுசாமி (போக்குவரத்து பணிமனை புதுச்சேரி) வயது 56 அவர்கள் மாரடைப்பால் 29.06.2018 அன்று மறைவுற்றார்.

செய்தியறிந்த புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி அவர்கள் கழகத்தின் சார்பில் துரை.முனுசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமரியாதை செய்தார். இறுதி நிகழ்வில் புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழக புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச் சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சடகோபன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் லோ.பழனி, விலாசினி இராசு, பகுத்தறி வாளர் கழக மேனாள் தலைவர் வீர.இளங்கோவன், செயலாளர் கோ.மு.தமிழ்செல்வன், புதுச் சேரி கழக மேனாள் செயலாளர் வே.அன்பரசன், புதுச்சேரி நக ராட்சி தலைவர் மு.ஆறுமுகம், பெரியார் பெருந்தொண்டர் இருசாம்பாளையம் செ.இளங் கோவன், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்பு சாமி, புதுச்சேரி கழக இளைஞ ரணி தலைவர் திராவிட இராசா, அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாரா யணன், புதுச்சேரி கழக அமைப்பாளர் குமார், கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், வாணரப்பேட்டை பெ.ஆதி நாராயணன், புதுச்சேரி மண் டல பகுத்தறிவாளர் கழக செய லாளர் கைலாச நெ.நடராசன், வில்லியனூர் இரா.சுந்தர், பிலால் முகமது நிஜாம், ச.பாலமுருகன், பெரியார் பெருந் தொண்டர் அ.வீரசேகரன் மற் றும் துரை.முனுசாமியுடன் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்த ஊழியர்கள், அரசு அதிகாரிகள், நண்பர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். மாலை 4 மணி அளவில் ஊர்வலமாக எடுத்து சென்று முருங்கப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டடது. மறைந்த துரை.முனுசாமிக்கு மு.வீரமணி என்கிற ஒரு மகன் உள்ளார். கழக மாநாடுகள், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் தவறாது தன்னுடைய தந்தை வழியில் தொடர்ந்து பங்கேற் றவர். சகோதரர் துரை.ராமசாமி யும் கழக தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர் துரை.முனுசாமிக்கு இரங்கல் கூட்டம் மாநில கழக தலைவர் சிவ.வீரமணி தலை மையில் நடைபெற்றது. இரங் கல் கூட்டத்திற்கு துரை.இராம சாமி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சிவ.வீரமணி, மண்டல தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், விடுதலை வாசகர் வட்ட தலை வர் இரா.சடகோபன், கழக மேனாள் செயலாளர் வே.அன் பசரன், பொதுக்குழு உறுப்பி னர் விலாசினி இராசு, சு.வீர சேகரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார். இறுதி நிகழ்வில் துரை. மு.வீரமணி, துரை. இரா.அமுதன் மற்றும் பல்வேறு இயக்க தோழர்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner