எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத்தில் நீண்ட கால உறுப்பினரும்,  கோவை மாவட்ட திரா விடர் கழக முன்னாள் தலைவரும், தற் போதைய பொதுக்குழு உறுப்பினருமான சிங்கை ஆறுமுகம் அவர்களின் தாயார் லட்சுமி அம்மாள் (வயது 85) அவர்கள் (4-7-2018) அன்று காலை 9 மணிக்கு இயற்கை மரணம் அடைந்தார்.   சிங்கா நல்லூர் பகுதியில் கழக தோழர்களுக்கு தோன்றா துணையாகவும், தோழர்களிடம் இணக்க மாகவும், குடும்ப பாசத்துடனும், நட்புடனும் பழகி வந்தவர்.

குறிப்பாக 1983 ஆம் ஆண்டில் சிங்காநல்லூரில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல பொதுக்கூட்டத்தின்போது லட்சுமி அம்மையாரின் கழகப் பணி அளப்பரியது. அம்மையாரின் இறுதி நிகழ்ச்சி இன்று (5-7-2018) காலை 8:30 மணிக்கு சிங்காநல்லூரில் அமைந்துள்ள சாந்தி கியர்ஸ் மின் மயானத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு: சிங்கை ஆறுமுகம் - 9843027512.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner