எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக துணைத்தலைவர் தலையா மங்கலம் இரா.துரைராசு அவர்களின் தாயார்  இரா.குப்பம்மாள் (வயது 85) அவர்கள் உடல் நலக்குறைவால் 04-07-2018 மாலை 4.15 மணியளவில் மறைவுற்றார்கள் என் பதை அறிவிக்க வருந்து கிறோம்  செய்தி அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் துரைராஜ் அவர் களிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,  மாவட்ட செயலாளர் அ அருணகிரி, தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன்  மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார்  மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், ஒன்றிய இளைஞரணி  செயலாளர் நா.அன்பரசு  நெல்லுப்பட்டு அறிவழகன் ஆகியோர் அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அம்மையாரின் இறுதி ஊர்வலம் 5 - 7 2018 வியாழன் மாலை 3 மணியளவில் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு எந்தவித மூட அடங்கும் இன்றி அடக்கம் செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner