எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை கழக ஆர்வலர் சா.அய்யப்பன் அவர்கள் 12.07.2018 இரவு 11 மணி அளவில் உடல்நலக்குறைவால் மறைவுற்றார். சீரிய சிந்தனையாளர் பகுத்தறிவாளர் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைப்பிடித்தவர். நமது கழகத்தின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர்.

தமிழர் தலைவரை அழைத்து தனது மகன்களுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்தவர். தனக்குப் பிறகு தனது பிள்ளையும், திராவிடர் கழக கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக விடுதலைக்கு தொடர்ந்து சந்தா கட்டி விடுதலையை காலையில் படித்துக் காட்டுவார். அவர் தனது சம்பந்திகளுக்கும் விடுதலை சந்தா தனது செலவில் கட்டி படிக்க செய்தவர். அவரின் இறுதி நிகழ்வில் குடந்தை மாவட்டத்தலைவர் கு. கவுதமன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தி.மில்லர், முன்னாள் மாவட்ட தலைவர் வை. இளங்கோவன், குடந்தை நகர தலைவர் பீ.இரமேஷ், குடந்தை ஒன்றிய துணைத்தலைவர் ஆ. தமிழ்மணி, அமைப்பாளர் அசூர், செல்வர் குடந்தை நகர செயலாளர் நா. காமராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா, விடுதலை சிறுத்தைகள் மாநில இளைஞர் எழுச்சிப் பாசறை செயலாளர் தமிழினி, அமைப்பாளர் செல்வராசு மற்றும் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner