எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளரும், ‘தமிழாலயம்‘ ஏட்டின் ஆசிரியருமான பேராசிரியர் மு.பி.பாலசுப்ர மணியன் அவர்களின் மூத்த மகள் திருமதி பா.முத்துச்செல்வி (வயது 56) 18.7.2018 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அடக்கம் நெல்லை மாவட்டம் தென்காசி அருகிலுள்ள அய்யாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

மறைவுச் செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனிடம் நேற்று (21.7.2018) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner