எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி கழக மாவட்டம் கல்லல் ஒன்றிய ப.க.தலைவர் பட்டமங்கலம்  கரு.சோமையா (வயது76) அவர்கள் உடல்நலக் குறைவால் 18.08.2018 அன்று அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.மறைவு செய்தி அறிந்து சிவகங்கை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, சிவகங்கை மாவட்ட தலைவர் பெ.ராசாராம்,பொதுக்குழு உறுப்பினர் செ.தனபாலன்,நாச்சிமுத்து, சாமி.திராவிடச்செல்வம் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தினர். தி.மு.கழக மாவட்ட செயலாளரும் மேனாள் அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பன், கிளைக் கழக செயலாளர் பட்டமங்கலம் சந்திரன் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.மறைந்த கரு.சோமையா அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிரச்சார கூட்டத்தை அவரது சின்னஞ்சிறு கிராமத்தில் நடத்தியவர் ஆவார்.தொடர்ந்து கிராம பிரச்சார கூட்டங்களை நடத்தியவராவார்.அவரது மனைவி மற்றும் நான்கு மகள்கள் ஒரு மகன் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில்  ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner