எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், முன்னாள்  மாநிலங் களவை எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின் பஞ்சாப் சியால்கோட் பகுதியில் 1923-ஆம் ஆண்டு பிறந்தார். பத்திரிகையாளராக வாழ்க் கையை தொடங்கிய அவர் எழுத் தாளராகவும், சிறந்த அரசியல் விமர்சகராகவும் புகழ் பெற்றார்.

நெருக்கடி நிலையின்போது முதன் முறையாக சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், அரசியல் விமர்சகராக பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது ஆணித்தரமான கருத்துகளை எடுத்துரைத்து வந்தார். மாநிலங்களைவை உறுப்பினராகவும், அய்.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். "நேருவுக்குப் பிறகு இந்தியா" போன்றவை இவரது புகழ்பெற்ற புத்தகங்களாகும். "எல்லைகளுக்கு இடையே" என்ற இவரது சுய சரிதை மிகவும் புகழ் பெற்ற புத்தகமாகும். இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். டில்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு  (ஆக.22) அவர் மறைவுற்றார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகள் அதன் போக்கு, உண்மையான குற்றவாளிகள் இன்றளவும் பிடிபடாமல் உள்ளனர் என்று பல கட்டுரைகளை ஆங்கில ஊடகங்களில் எழுதியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner