எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் அமைச்சரும், திமு.கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான ஆற்காடு நா. வீராசாமி அவர் களின் இளைய சகோதரர்

நா. சீனுவாசன் (வயது 79) அவர்கள் உடல் நலக் குறை வால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24.8.2018) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.

நா. சீனுவாசன் மறைவுற்ற தகவல் அறிந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்காடு நா. வீராசாமி அவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.

மறைவுற்ற நா. சீனுவாசன் அவர்களின் உடல் அவரது சொந்த  ஊரான வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியம் குப்புடிச் சாத்தம் கிராமத்தில்  பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இன்று (25.8.2018) மாலை 4 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் சார்பில் வேலூர் மண்டல தலைவர் ப. சடகோபன் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner