எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதிய வரவின் புத்தெழுச்சி காணீர்!

அன்புள்ள அய்யா,

அன்புள்ள ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர் களுக்கு வணக்கம். எனது பெயர் வா. ஜெயபாஸ்கரன். எனது ஊர் மதுரை. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தோழர் கோ. வெற்றிவேந்தன் மூலமும், முகநூல் மற்றும் புலணத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் தந்தை பெரியார் நூல்களையும் அவர்கள் மூலம் வாசித்தேன். தந்தை பெரியார் அவர்களின் கொள் கைகள்மீது எனக்கு தீவிர பற்று உருவாகி உள்ளது.

4.2.2017 அன்று மதுரையில் நமது திராவிடர் கழக நிகழ்ச்சி இருப்பதாக கோ. வெற்றி வேந்தன் தெரிவித்தார். நானும், எனது தோழர்கள் நான்கு பேரும், அந்த திராவிடர் கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். மேலும் மதுரை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்களிடமும் எனக்கு தொடர்பை ஏற்படுத்தினார் கோ. வெற்றிவேந்தன் அவர்கள்.

நமது பிரச்சார விழாவில் தந்தை பெரியார் கருத்துக்களை தங்களது சொற்பொழிவு மூலம் தெரிந்து கொண்டோம்.  தாங்கள் மதுரை மாநகருக்கு வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்கும், எனது தோழர்கள் மு. பிரபாகரன்,

மு. ஈஸ்வரன், பா. ராஜசேகரன் ஆகியோர்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி. எனது ஆயுள் உள்ளவரை திராவிடர் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மதுரை மாவட்டத்தை தந்தை பெரியாரின் கோட்டையாக மாற்றிக் காட்டுவேன்.

- வா.ஜெயபாஸ்கரன், மதுரை -20

 


‘பிரேமானந்த்'

தமிழர் தலைவரால்

'எழிலன்' ஆனார்

மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, சென்னை பெரியார் திடலில் கடந்த டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ‘இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் என் மகன் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சி பெற்றான். பயிற்சி முடிந்து சான்றிதழ் தரும் நேரத்தில் எனது மகன் பெயர் ‘பிரேமானந்த்' என்பதை தூய தமிழில் ‘எழிலன்' என வைத்து சான்றிதழ் வழங்கியது, அய்யா தந்தை பெரியார் அவர்களே பெயர் வைத்தது போல் இருந்தது. மேலும் கடந்த 16.1.2017 அன்று ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் நடை பெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள், ஆசிரியர் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு முப்பெரும் விழாவில் எனது மகன்கள் எழிலன் மற்றும் இராவணன் உரையாற்றியதை கண்டு அனைவரும் பாராட்டினர்.

இப்பெயர் மாற்றம் உள்ளபடியே எனது மகனின் (எழிலன்) இயக்க பணி மற்றும் சமுதாய பணிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்பது திண்ணம். ‘எழிலன்' என பெயர் வைத்த தங்களுக்கு நன்றி.

- சங்கீதா  (ஈரோடு) 23.1.2017

Comments  

 
#1 yasin 2017-10-01 11:37
அய்யா வணக்கம்
பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடங்க நேரம் வந்து விட்டது காவியாட்டம் அளவுக்கு அதிகமா கி விட்டது. எங்களின் தந்தை பெரியாராக மாற வேண்டும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner