எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாள்தோறும் விளம்பர நோக்கோடு வெளிவருகின்ற நாளேடுகளின் மத்தியில், வருமானத்தைக் காட்டிலும் தமிழர் களின் தன்மானம் - இனமானம் தான் பெரிது எனக்கருதி சமுதாய நல நோக்கோடு, பகுத்தறிவுக் கருத்துக்களைத் தாங்கி வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளேட்டினை வாசிக்கும் எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். அதில் குறிப்பாக, 6.4.2017 மற்றும் 7.4.2017 நாளிட்ட நாளிதழ்களில் குறிப்பிடத்தக்கவை;

1) உணவுப் பழக்கம் தனிமனிதனைச் சார்ந்தது - இறைச்சிக் கூடங்களை மூடுவது சட்ட விரோதம்! என்று உ.பி.அரசின் மண்டையில் ஓங்கி அடித்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மக்கள் அனைவராலும் கையொலி எழுப்பி பாராட்டப் படுகின்ற தீர்ப்பாக அமைந்தது.

2) ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “வாழ்வியல் சிந்த னைகள்” கட்டுரை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுக் கருவூலம் - அரிய பொக்கிஷம் என்றால் மிகை யாகாது.

3) “உயர்ஜாதி ஆதிக்கமும், மரக்கறி உண்பவர்களாக மாறுகின்ற அரசியலும்“ என்ற தலைப்பில் குஜராத்தின் வர லாற்றை வருட வாரியாக பட்டியலிட்டிருப்பது என்னைப் போன்ற இளைஞர்களுக்கு புதிய வரலாற்றுத் தகவலாக இருந்தது.

4) தமிழகத்தைக் குறிவைக்கும் கயவர்களிடம் எச்சரிக் கையாக இருந்து அவர்களின் நயவஞ்சகத்தை முறியடிக்க வேண்டியதின் அவசியத்தை தோழர் தா.பாண்டியன் அவர்கள் தன்னுடைய வரலாற்றுப் பேருரையின் வாயிலாக நாட்டு மக்களுக்கு விடுத்த அறைகூவல் எச்சரிக்கை மணியாக ஓங்கி ஒலித்தது.

5) கங்கை என்னும் சாக்கடையைத் தூய்மைப்படுத்த முடியுமா? எனும் தலையங்கம் நம் நாட்டு மக்களின் வரிப்பணம் ஆட்சியாளர்களால் எப்படி எல்லாம் பாழ்படுத்தப்படுகிறது என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.

6) மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிக்கு அரசியலையும் தாண்டிக் களமாடுவோம்! - எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் எழுச்சி மிகுந்த உரைவீச்சு சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுகிறது.

7) முத்தாய்ப்பாக - “தமிழ் இந்துக்கு மறுப்பு” என்ற தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் இரண்டு நாள் (6.4.2017, 7.4.2017) எழில் வாய்ந்த கட்டுரை சமஸ்கிருதமய சமஸ் அவர்களுக்கு பதிலடியாக மட்டுமின்றி சரியான சாட்டையடியாகவும் அமைந்தது.

வீடெங்கும் விடுதலை, பாரெங்கும் பகுத்தறிவு எனும் தொலைநோக்குப் பார்வையோடு சமுதாய நலன் சார்ந்து இன உணர்வைக் கருத்தில் கொண்டு பகுத்தறிவு எண்ணங்களை பல வண்ணங்களாகத் தீட்டி அழகுடனும், புதுப்பொலிவுடனும் நாள்தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட்டிற்கு இளைஞர்களும் - மாணவர்களும் “ராயல் சல்யூட்” அடித்து அகமகிழ்கின்றனர், பாராட்டிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி,

தாம்பரம், சென்னை-45.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner