எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெறுநர்:

தமிழ்த்தூய நெஞ்சர்,

ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்,

பெரியார் திடல், சென்னை - 7

பேரன்புடைய பெரியீர்!

வணக்கம். 21.4.2017ஆம் நாளன்று புத்தக விழாவில் தங்களிடம் பெற்ற 'பெரியார் களஞ்சியம்' மற்றும் தங்கள் 'வாழ்வியல் சிந்தனைகள்' என்ற இரு நூல்களையும் இரு நாள்களில் முழுமையாகப் படித்து மனநிறைவோடு இதை எழுதுகிறேன்.

'பாராட்டுவதை உடனே செய்யுங்கள்' என்ற தங்கள் நூலில் கண்ட கட்டுரை தந்த உந்து சக்தியால் சில சொல்ல முனைகிறேன்.

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற தங்கள் பாங்கு நூல் முழுவதும் காண முடிகிறது. ஏன், கடவுளையே தங்கள் நூலில் கண்டு வணங்கினேன். காரணம், நீங்கள் மேற்கோள் காட்டிய இங்கர்சாலின் கூற்றுப்படி, 'கிஸீ லீஷீஸீமீst ரீஷீபீ வீs tலீமீ ஸீஷீதீறீமீst ஷ்ஷீக்ஷீளீ ஷீயீ னீணீஸீ'

அடுத்து,  'பெரியார் களஞ்சியம்' சிறு வயதிலிருந்தே அவரது பதில்களை விட அவரது கேள்விகளை எனக்கு மிகவும் பிடிக்கும். சரியாகத்தானே அவர் கேட்கிறார் என்று எனது தந்தையிடமே பல முறை வாதிட்டிருக்கிறேன். எல்லாவற்றையும்விட,  தற்கால மொழிப்படி சொல்வதானால் அவரது 'லொள்ளு' சிரித்து ரசித்துப் போற்றத்தக்கது. குறிப்பாக "புரோகிதரைப் போய் சாமின்னு கூப்பிட்டா கோயிலுக்கு உள்ளே இருக்கிற சாமிக்குக் கோபம் வராதா? ஒரு முதலியார் இருக்கும் போது அங்கு ஓடும் நாயைப் பார்த்து முதலியாரேன்னு கூப்பிட்டா முதலியாருக்குக் கோபம் வராதா" என்ற சுவையான கேள்விகளைச்  சொல்லலாம். 1959-1960களில் அவர் பேசிய பேச்செல்லாம் உண்மையிலேயே களஞ்சியம்தான்.

இரு நூல்களும் சிந்தனைக்கு விருந்து. வாழ்க தங்கள் தன்னலமற்ற தமிழ்ப் பணி!

செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர்

மு.பெ. சத்தியவேல்முருகன்

ஆதம்பாக்கம், சென்னை