எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெருமதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 20.12.2016 இல் 80 ஆம் அகவையை நிறைவு செய்து 81 ஆம் ஆண்டு பிறந்த நாளில் காலடி வைத்த என் உடல்நிலை ஓரளவுக்கு நந்நிலையில் உள்ளது. எனினும், வெளியூர் சென்று திரும்புவது (துணையின்றி) எளிதாக இல்லை; எனவே, தவிர்க்கிறேன்.

இன்றைய ‘முரசொலி’ (13.5.2017) யில் ‘‘மானமிகு கலைஞரின் மகத்தான முழக்கங்கள்’’ தலைப்பிட்ட உங்களுடைய கட்டுரையும், கட்டுரையில் கலைஞரோடு நீங்கள் இருக்கும் ஒளிப்படமும் சிறப்பாக உள்ளன. மிகுந்த மனநிறைவைத் தருகின்றன - அருமை!

2.6.2008 இல் தி.மு.க. பொதுக்குழுவில் கலைஞர் சுட்டிக்காட்டிய, உங்களால் நினைவுபடுத்தப்பட்ட புரட்சிக்கவிஞரின் வரிகளை இன்றைய அரசியல் சூழலில் நினைவில் கொள்வது நலம்.

‘‘வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்;

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்!’’

அன்பில் எழுதும்,

பாவலர் எழுஞாயிறு
13.5.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner