எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

படித்தவர்கள்தான் அதி மூடநம்பிக்கையாளர்கள்

அயர்லாந்தில் நடிகர் ஸ்டீபென் ஃப்ரை என்பவர் எவ்வளவு பகுத்தறிவு சிந்தனையோடு கடவுள் மறுப்பை துணிந்து சொல்லியிருக்கிறார். அதை தமிழர் தலைவர் கி.வீரமணி முன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நாடு அந்த புகாரை தள்ளுபடி செய்துள்ளது. அந்த அரசை பாராட்ட வேண்டும். மத துவேச சட்டம் 295 ஏ இந்தியாவில் ஏன் தூக்கி எறியப்படவில்லை என்ற கேள்வி கேட்டுள்ளார். இதை துணிந்து ‘விடுதலை’ வெளியிட்டது. இதை இடது சாரிகள் தமது பத்திரிக்கையில் பதிவு செய்வார்களா?

நாட்டில் ஒரு பக்கம் மதம், கோயில், டாஸ்மாக், கூட்டம் குறையாத இடம் திருவிழா கோலம்; என்றுதான் மனிதன் மனிதனாக மாறுவானோ?

பெரியாரின் “பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்“ என்ற தாரக மந்திரத்தை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள்; தெரியவில்லை!

நான் பார்க்கும் பக்தர் கூட்டம் வணங்கிவிட்டு அதே பாதையில் டாஸ்மாக்கில் நிற்கின்றது. யாரைக் குறை கூறுவது!

அடிப்படையை மாற்றாமல் எந்தப் பலனும் இருக்காது.

7ஆம் பக்கத்தில் “தேவர்கள் முறை”, “சித்திரபுத்திரன்” எழுதிய நாடகம் எவ்வளவு யதார்த்தமான நாடகம்.

‘விடுதலை’ எத்தனை படிகள் விற்பனை ஆகியி ருக்கும். அதைப்படிப்பவர்கள் சிந்தித்தாலே போதும். சிந்தனை இல்லாத மக்களை வைத்து எப்படி மாரடிப்பது!

இப்படி ஒரு சுதந்திர நாடு, இதற்கு சுதந்திரம் தேவை தானா? காட்டாட்சியை நாம் பார்த்துப் பார்த்து நாம் வன்முறையாளனாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டு விடும் போல் தெரிகிறது.

ஒவ்வொரு அரசியலும் ஒவ்வொரு கோணம். எலியும், தவளையும் கதை கேட்டிருக்கிறோம். அதுதான் நடக்கிறது. வாக்கு அரசியல் என்பது மக்களிடம் வாக்குவாங்க ஏமாற்றும் வேலை, சமீபத்தில் “சேகுவரா” ஆவணப்படம் பார்த்தேன்.

கியூபா போராளியை பெற்று சாதனை புரிந்த மாமனிதர்களை நினைக்கும்போது எவ்வளவு பெருமை யாக இருக்கிறது. அதனால்தான் வீரம் செறிந்து ஏகாதி பத்தியத்தை எதிர்க்கிறார்கள். புரட்சியால் வந்ததால் மக்கள் புரட்சிகரமாக இருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரம் வித்தியாசமானது. ஆகவே மக்கள் மண்ணாகத்தான் இருப்பார்கள்.

படித்தவர்கள்தான் அதிகமான மூடநம்பிக்கையில் வாழ்கிறார்கள்.

இந்த மக்களிடையே வாழ்வதே வெட்கக்கேடு தான்!

- இரா.சண்முகவேல்

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்-627860