எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மாட்டிறைச்சி பிரச்சினையில் பாரதிய ஜனதா அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எழுந்து போக்குவரத்திலிருந்து அனைத்தும் செயல்பட முடியாத அளவிற்கு செய்திருக்கவேண்டும். அது இல்லை, அரசு உதவி பெறுகின்ற உயர்நிலை, மேல்நிலை (தனியார் பள்ளிகளில்) ரூ. 5000 வரை சேர்க்கைக்கு பணம் வாங்கும் நிலை. அதையும் மக்கள் கண்டு கொள்ளாது பணத்தை கட்டி சேர்த்த பிறகு எப்படி லஞ்சம் அழியும் - கொடுமையான நாடாக போய் விட்டது.

இராஜபாளையம் அருகில் சேத்தூர் பேரூராட்சி காமராசர் நகரில் பண்டிதர் அயோத்தி தாசர் அறக்கட்டளை அலுவலகத்தில் அம்பேத்கார் படம் உண்டு.

விழாவொன்றில் கலந்து கொண்டேன்; எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவர் “வீரமணி புத்தகம் வைக்கக் கூடாது” என்று சொன்னார். எங்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கூறினார். நான் இதை சிவகிரி அய்யா, ஜெயராசிடம் கூற வேண்டியது தானே என்று கூறினேன்.

ஜாதியை ஒழிப்பதற்கு யாரும் பேசவில்லை. சாதியரத்தத்தை சிறுவர்களுக்கு போதித்தார்கள். பெரிய எழுத்தாளர்கள், முனைவர்கள் வந்திருந் தார்கள். பாரதி சொன்னது போல் “படித்தவன் அநியாயம் செய்தால் அய்யோ, அய்யோ என்று போவான்” என்று சொன்னதுபோல செயல் பாடுகள் உள்ளன.

எந்த மதம் தகர்க்கப்பட வேண்டுமோ அதைத் தகர்க்கப் பேசவில்லை. வள்ளுவனை தன் ஜாதிக்குள் இழுக்கும் சமூகம் வள்ளுவன் பெயரை வைத்துள்ளார்களா?

பெரியார் வாங்கித்தந்த இட ஒதுக்கீடால் வளர்ந்த மக்கள்! பெரியார் படம் இல்லை. பெரி யாரைப்பற்றி நன்றி கூட கூறவில்லை. இன்றைய உடைமாற்றம், பொருளாதார மாற்றத்திற்குப் பெரியார் காரணமல்லவா?

நன்றி மறந்த நாடு, நன்றி மறந்த மக்கள்! பார்ப்ப னனைவிட ஒழுக்கம் சார்ந்த மக்களாகத் தாங்கள் வாழ்ந்து அந்தணனை விட அந்தணனாக இருக்க வேண்டாமா?

வள்ளுவன் “செய் நன்றி கொன்ற மகற்கு” என்று இவர்களைக்கண்டுதான் எழுதி இருப்பார் போலும்!

சமீபகால “விடுதலை” இதழில், மத்திய, மாநில அரசுகளின் வித்தியாசமான செயல்பாடுகளை சம்மட்டி கொண்டு அடிப்பது போல் உள்ளது. வாக்கு வங்கியை எதிர்பாரத இயக்கம் - அது அப்படித்தான் கூறும். பெண்களுக்கு சமநீதி என்பதை எல்லாவித அரசியல் கட்சிகளை விட திராவிடர் கழக இயக்கம் 36 தீர்மானங்களையும் போட்டு தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. மற்ற அரசியல் கட்சிகள் துணைநின்று, கை கொடுத்து பெண் இனத்தைக் காப்பாற்றி, அவர் களுக்கு சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வழிவகுக்க வாழ்த்தும்...

தோழர் இரா.சண்முகவேல்

ஜீவா படிப்பகம்,

கீழக்கலங்கல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner