எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

ஒரு பெரியார் தொண்டரின் கேள்வி

விடுதலைக்கு வித்திட்ட வீரன், பகுத்தறிவு பகலவன், பண்பின் இருப்பிடம், ஈரோட்டுச் சிங்கம் பெரியாரின் பெருந்தொண்டன்  “கடவுள் மறுப்பு பற்றிய கருத்துகள்”...

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இராசபக்சேவுக்கு இந்த கடவுள் எந்த தண்டனை கொடுத்துள்ளது?

கோயில்களில் உள்ள பூசாரிகளே நம்மை மிரட்டும் பாகிஸ்தான் வீரர்களை கொன்று குவிக்க வேண்டும். இந்த கடவுள் இருக்கும்போது போர் வீரர்கள் நாட்டைக் காக்க எதற்கு?

இந்த கடவுள் - கால், கைகளை வெட்டிச் செல்லும் திருடர்களை விட்டு வைப்பது ஏன்? தன்னைக் காக்க முடியாத தெய்வம் உன்னைக் காப்பது எப்படி - ஆடு, கோழி, பன்றி பலி கொடுக்கும் தம்பி - நமது செல்லப்பிராணி நாய், பூனைகளை ஏன் பலி கொடுக்கவில்லை - கோவில்களில் முடியை எடுக்க வேண்டும்  நீ - மொட்டையுடன் கை, கால்களை வெட்டித் தருகின்றேன் என்று வேண்டிக்கொள்வது உண்டா?

கடமை செய்பவன் கடவுளை விட பெரியவன், கடமை கண் போன்றது. மக்களை மதிப்பவன், மகேசனை விட பெரியவன். மக்களுக்கு உதவுபவன் மனிதன் - கடமை செய்பவருக்கு கவனம் தேவை. கஷ்டம் இல்லை, கவலை இல்லை. நிமிர்ந்து நிற்க நேர்மை தேவை, உயர்வு அடைய உண்மை தேவை,  “விடுதலை” படிப்போம் கெடுதல் இல்லை. விடுதலைக்கு யாரும் விரோதி இல்லை. பெரியாரின் பெருந்தொண்டனாய் இன்றும் என்றும் செயல்பட எனது இதயம் கலந்த நல்வாழ்த்துக்கள்.

பொன்.அய்யம்பெருமாள்

(மக்கள் அனுதாபி)

இரும்புலிக் குறிச்சி - 621804,

செந்துறை - அரியலூர் மாவட்டம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner