எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

ஒரு பெரியார் பெருந்தொண்டரின் நெஞ்சுருக்கும் கடிதம்

மானமிகு பேரன்பு மிக்க தலைவர் அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் கோடி, கோடி.

அய்யா நான் (வயது 88) இன்றோ நாளையோ என்றிருப்பவன். என் முதலாவதும் கடைசியானதுமான இந்தக் கடிதத்தை எழுத வேண்டுமென்ற எண்ணத் தால் உங்களுக்கு இந்த சிரமத்தை கொடுக்க வேண்டியவனாகிவிட்டேன், மன்னிக்கவும். 1948 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும்போது விழுப்புரம் குரங்குக்கோயில் குளக்கரையில் அய்யா அவர்கள், அம்மா அவர்கள், தாங்கள் மூவரும் பேசிய பேச்சைக் கேட்டதிலிருந்து இன்று வரை மாறா நிலையில் இருந்து வருகிறேன். நம் கூட்டங்கள் மாநாடுகளுக்குகெல்லாம் சென்று வருவேன். மேலும் தாங்கள், என் மகன் இளங்கோவன் திருமணம் தங்கள் தலைமையிலும், மற்றொரு மகன் பழனிசாமி திருமணம் பொருளாளர் சாமிதுரை அவர்கள் தலைமையிலும் நடத்தி உள்ளீர்கள்.

என்னுடைய இந்த வயதில் உலகளவில் நம் பகுத்தறிவு தந்தையைப் போல் மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து அயராது பாடுபட்டவர்கள் யாரும் இல்லை. அய்யாவுக்கு பிறகு அம்மா, தாங்கள் தவிர மற்றவர்கள் இயக்கப் பொறுப்பை பெற்றிருந்தால் கழகம் இருந்திருக்குமா என்று எண்ணுபவன் நான். அய்யா உங்கள் உழைப்பு இருக்கிறதே அதை எவ்வாறு எழுதுவது. இரவு, பகல் 24 மணி நேரமும் என்றால் தங்கள் உடல் எவ்வாறு தாங்குகிறது!

அய்யா என்னுடைய பணிவான

அன்பு வேண்டுகோள்

இடஒதுக்கீட்டினால் படித்த பிள்ளைகளுக்கெல்லாம் அதைப்பற்றி தெரிந்துக் கொள்ளாமல் கோயில், தேர், திருவிழா என்று பெரும்பாலோர் உள்ளார்கள். இவர்களை மாற்ற தலைமைக் கழகத்தின் கீழ், ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கிளைக் கழகத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா கிராமத்திலும் கழகத்தை ஏற்படுத்தினால் கிராமத்தில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு பகுத்தறிவு ஏற்படும்; நாடும் நலம் பெறும் என்று கூறி முடிக்கிறேன்.

வணக்கம்

பணிவுடனும், அன்புடனும்

ஆ.முனுசாமி

தேவரடியார் குப்பம்

விழுப்புரம் மாவட்டம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner