எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

அதிமுக ஆட்சியில் நூலகங்களில்

‘விடுதலை’, ‘உண்மை’ க்கு இடமில்லை; ‘விஜயபாரதம்‘, ‘துக்ளக்‘குக்கு இடமா?

திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷன்லிஸ்ட் ஆகிய நாளேடு மற்றும் மாத இதழ்களும் அரசு நூலகங்களுக்கு கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நல் முறையில் சென்று கொண்டிருந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு மக்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து விடக்கூடாது என்று விடுதலை, உண்மை மற்றும் மாடர்ன் ரேஷன்லிஸ்ட் ஆகிய ஏடுகளை அரசு நூலகத்திற்கு அனுப்புவதை நிறுத்தியதை அறிவோம்.

இருந்தபோதிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 50,000 விடுதலை சந்தாக்களை கழக தோழர்கள் விரைந்து வழங்கினர். எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் விடுதலை தொடர்ந்து வீரநடை போட்டுக் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஆனால் தற்போதைய அரசியல் மாற்றம் ஏற்பட்டு பார்ப்பனியத்தின் நிழலாக இன்றைய ஆட்சி செயல்பட்டுக்கொண்டு வருகிறது என்பதையும் அறிவோம்.

அண்மையில் சென்னையிலுள்ள தேவநேய பாவணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு விடுதலை, உண்மை, ரேஷனலிஸ்ட் வருவதில்லை என்று அறிந்திருந்தாலும் மற்ற புத்தகங்களை படிப்போம் என எண்ணினால் அனைத் தும் பார்ப்பனீயம், இந்து தர்ம வேதங்களைத் தான் உள்ள டக்கியுள்ளது. குறிப்பாக துக்ளக் மற்றும் விஜயபாரதம் போன்ற ஏடுகளை நாம் அறிவோம். இருந்தபோதிலும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. யினரின் மாத நூலான “மாணவர் சக்தி” நூலகங்களுக்கு வருகிறது. மற்றும் தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளின் நூல்களும் இடம் பெற்றிருக்கிறது. இதில் தந்தை பெரியாரைப் பற்றியும், திராவிடர் கொள்கைகள் பற்றியும் தவறான வரலாறுகள் இடம் பெறுகின்றன.

தொடர்ந்து நமது இயக்க ஏடுகள் அரசு நூலகத்திற்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற மாணவர்களின் அவா.

-யாழ்திலீபன்

சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner