எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செப்டம்பர் 15 ஆம் தேதி சங்கரன் கோவிலிலிருந்து விருதுநகர் வந்து புதுச்சேரிக்கு அன்று மட்டும் வருகின்ற கன்னியாகுமரி அதிவேக வண்டியில் 16ஆம் தேதி புதுச்சேரி அடைந்து புதுவை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் கி.ராஜ நாராணயன் அவர்களின் 95ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து அவர்களுக்கு ஜீவா படிப்பகம் சார்பில் சால்வை போர்த்தி கவுரவித்தேன். 9.30 மணியிலிருந்து நிகழ்ச்சி இரவு 10 மணியோடு முடிந்தது. நான் அவர்களைப் பற்றி மஞ்சவடி - ராஜ்பவனம் என்ற ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி யிருந்தேன்.

கி.ரா. பேசும்பொழுது இடதுசாரிகளை விமர்சனம் செய்து பேசினார். அவர்களும் திராவிடர் கழகம்போல் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டார். பார்வை யாளர்களிடமிருந்து பலத்த கையொலி!

தலை மறைவு, வாழ்க்கை நடத்தியவர், விவசாய போராட் டங்களில் கலந்து சிறை சென்றவர் அவரை இயக்கம் கண்டு கொள்வதில்லை. அவரும் இவர்களைப் பொருட்படுத்துவதில்லை.

17 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் இடம் - தோழர் புதுவை சிவ.வீரமணியிடம் தகவல் அறிந்து அங்கு நானும், என் பேரன் பிரிட்டோவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து தோழர்களிடம் அறிமுகமானேன். ஒப்பற்ற தலைவரின் பிறந்த நாளை எவ்வளவு உணர்ச்சியோடு ஆண்களும், பெண்களும் போட்ட முழக்கங்கள், உண்மையிலேயே அப்படிப்பட்ட தொண்டர்களை இந்த இயக்கத்தில் தான் காணுகின்றேன்.

என்னுடைய கட்டுரை “பெரியாரைக் கொண்டு செல்வோம்“ என்பதை பதிப்பித்த தாக தோழர் அலைபேசியில் சொல்லும் போது மகிழ்ச்சியில் திளைத்தேன்.

சிங்காரவேலர் சிலை, ஜீவா சிலை சென்று பார்த்தேன். ஜீவா பெயரில் ஒரு மேல்நிலைப்பள்ளி புதுவையில் இயங்கு வதைப் பார்த்து, அதில் தோழர் வ.சுப்பையா பெயர் பொறித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்குப் புதுவையில் நினைவுப் பள்ளி - பாராட்டப்பட வேண்டிய மண்!

இரண்டு நாள் பயணம் சிறப்பாக அமைந்திருந்தது. வந்தவுடன் “விடுதலை” பத்திரிகைகளை படித்தேன். மக்கள் படிக்க வேண்டிய பத்திரிகை. தங்கள் இயக்கத் தோழர்கள் ஒரு உணர்ச்சிபூர்வமான, சமு தாயத்தை மாற்றும் படையினராவர்!

- இரா.சண்முகவேல்

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner