எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

'என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்' என்ற புத்தகத்தின் மதிப்புரையை முனைவர் பேராசிரியர் திரு. ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 25.09.2017 மற்றும் 26.09.2017 தேதிகளில் வெளிவந்த "விடுதலை" நாளிதழ்களில் எழுதியதை கண்டுற்றேன். அதை மற்ற சில நண்பர்களும் கண்டு அவரது மதிப்புரையை மிகவும் பாராட்டினர். அந்த புத்தகத்தில் உள்ள சில முக்கியமான செய்திகள் சிறப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு புத்தக ஆசிரியருக்கு யாராவது சிலர் அந்த புத்தகத்தை படித்தாலே அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதற்கு மேலாக படித்து, யாராவது பாராட்டினால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அதுவும் திரு. மங்களமுருகேசன் போன்ற பேராசிரியர் - அறிஞர் அதைப் படித்து  நல்ல முறையில் விமர்சிப்பது எனது பெரும் பேறேயாகும். அத்துடன் 06.09.2017 அன்று நடந்த அந்த நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தியதுடன், அந்த விழாவைப்பற்றி அடுத்த நாள் வெளியான  'விடுதலை' இதழில்  மேலும் சிறப்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டதற்கும் நூலாசிரியர் என்ற முறையில் ஆசிரியர் ஆகிய தங்களுக்கும், தங்களது உற்சாகமானப் படையினருக்கும் என்றும் என் நன்றி!

- ச. ராஜரத்தினம், வரித்துறை வல்லுநர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner