எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஒரு மாதத்திற்குள் முப்பது நாள்கள் உள்ளன. அதில் இரண்டு நாள்கள் மட்டும் நல்ல நாள்கள்; இருபத்தி எட்டு நாள்கள் கெட்ட நாள்கள் என்று பூணூல் ஆகம சைவர்கள் பஞ்சாங்க நூல், ஆகம நூல் என்பதாக வெளியிட்டு நாடு முழுவதிலும் அனைத்து பொது மக்களையும், அப்பாவி மக்கள் அனைவரையும் நம்ப வைத்து விசேசம் வைக்கிறார்கள்.

1.            குழந்தை பிறப்பு புண்ணியாச்சினைக்கு -        ரூ. 50,000

2.            பேர்வைப்பு புண்ணியாச்சினைக்கு       -              ரூ. 50,000

3.            வயசுக்கு வந்த புண்ணியாச்சினைக்கு              -              ரூ. 50,000

4.            தெரட்டி புண்ணியாச்சினைக்கு                -              ரூ. 50,000

5.            கல்யாணம் புண்ணியாச்சினைக்கு       -              ரூ. 50,000

6.            தொழில் துவங்கும் புண்ணியாச்சினைக்கு   -              ரூ. 50,000

7.            60ஆம் கல்யாணம் புண்ணியாச்சினைக்கு     -              ரூ. 50,000

8.            இறந்த பிறகு கருப்பு நீக்கும்

புண்ணியாச்சினைக்கு      -              ரூ. 50,000

ஒரு மனிதன் வாழ்க்கையில் இவ்வளவு பணம் ஆகமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகமர்கள் எந்த தொழிலும் செய்யாமல், எந்த வேலைக்கும் போகாமல், அடுத்தவர்கள் உழைப்பின் பணத்தில், மாடிமீது மாடி கட்டுகிறார்கள். விதவிதமான பெரிய கார்கள் வாங்குகிறார்கள், உலகம் முழுவதும் அவர்கள் அமைப்புக்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். நமது திராவிடர் விடுதலை இயக்கங்களுக்கு எதிரான இரகசிய கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் இனி வரும் காலகட்டங்களில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகிவிடும். நாம் என்ன போராட்டம் செய்தாலும் பலனளிக்காது. இனி எந்த வகையான நூல்களாக இருந்தாலும் அரசுத் துறைகள் மட்டும் மக்கள் ஒப்புதலோடு மக்கள் மத்தியில் விடட்டும். பஞ்சாங்கத்தை தடை செய்வதற்கு நீதி மன்றத்திலும் வழக்குத் தொடரப்பட வேண்டும். ஆகவே நம் தலைவர்கள் அனைவரும் இந்த இனவெறிக் கலாச்சாரத்திணிப்பு நூலை தடைசெய்து அப்பாவி பொது மக்களை காப்பாற்ற வேண்டுமென்று தாழ்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- பி.மணி

சென்னிமலை, ஈரோடு மாவட்டம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner