எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முகநூலிலிருந்து...

பிற மொழிகளைவிட மேன்மையான மொழி தமிழ் மொழியே!

தமிழ் மொழியின் மேன்மை அறியாத பிற மொழி மக்கள் குறிப்பாக வட இந்திய மாநில மக்கள் நாம் தமிழ் பேசும் போது நகைப்பதும், நையாண்டித் தனம் செய்வதும், திரைப்படங்களில் கேலி செய்வதும் இன்று வரைத் தொடர்கின்ற ஒன்றாகும்.

ஆனால் தமிழ் மொழியானது எழுதவும் படிக்க வும் பேசவும் இயற்கையாகவே எளிதான ஒன்று.

தமிழ் எழுத்துகள் சீன சப்பான் உருது வட மொழி போன்று கீழிருந்து மேல், மேலிருந்து கீழ், வலமிருந்து இடம் என எழுது கோலைப் பலமுறை எடுத்து மேலும் கீழும் பக்கவாட்டிலும் சில குறிகளை இட்டும் கடினமாக எழுத தேவை யில்லை. எழுது கோலையோ எழுத்தாணியையோ எடுக்காமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம். சில மொழி எழுத்துகள் ஒரு எழுத்தை எழுதவே பல முறை எழுது கோலை எடுத்து பல குறிகளிட்டு எழுதக் கூடியவை. இத்தொல்லை தமிழ் எழுத்து களுக்கு இல்லை.

தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்க வும் பேசவும் எளிது. தமிழில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒலியாதலால் எவரும் எளிதாக எதையும் படிக்க முடியும்.

தமிழ் மொழி பேசவும் எளிதானது. தமிழ்ச் சொற்களில் 100 சொற் களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனி நாக்கு, அடி நாக்கு, நடு நாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்கு கொண்டே ஒலிப்பதாக இருக்கும். பிற மொழிகளில் 100க்கு 50-70 விழுக்காடு தொண்டைக்குக் கீழேயிருந்து வலிந்து ஒலித்தாக வேண்டியதிருக்கும்.

(எ-டு) பஹுத் அச்சா ஹை. இப்படி வலிந்து ஒலிப்பதற்குப் பதிலாக தமிழில் “மிக நன்று” என்று ஒலித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

வட மொழிச் சொற்கள் பல அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இதனால் நாவும் தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்து விடுகிறது. வட மொழி அறிஞர்கள் “கதா கலாட்சேபம்’’ செய்யும் போது அடிக்கடி பசும் பாலைக் குடித்துக் கொண்டு வயிற்றை நனைத்துக் கொள்வர். அமர்ந்த படியே பேசுவர்.

ஆனால் தமிழறிஞர்கள், பேச்சாளர்கள் சில துளி தண்ணீர் கூட அருந்தாமல் நின்று கொண்டு பல மணி நேரம் பேசும் ஆற்றல் பெற்றவராகின்றனர். இது தமிழின் கொடை.

அன்பு, அறிவு, ஈகை, ஆக்கம், உறவு, உணர்வு, உணவு, வாழ்க என்கிற சொற்களானாலும், எதிர்வினையாற்றும் கோபம், சினம், வேண்டாம் போன்ற சொற்கள் கூட மென்மையாகவும் எளி மையாகவும் தான் ஒலிக்கும்.

பிற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பிய ஆரியர் அதற்கு முன்னோடியாக முதலில் ஜ ஷ ஸ ஹ க்ஷ என்ற அய்ந்து எழுத்துகளை திணித்தனர். பாவம் வெற்றி பெற முடியவில்லை. தனித்தமிழ் இயக்கமும் திராவிட கருத்தியலும் அதை முறியடித்தன.

முகூர்த்தம், வருஷம், இஷ்டம், மாஸம், பத்திரிக்கை, பொக்கிஷம், என்பனவெல்லாம் மாற்றம் பெற்று திருமணம், ஆண்டு, விருப்பு, திங்கள், நாளேடு, காப்பகம் என நற்றமிழ்ச் சொற்களாக வலம் வருகின்றன.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. காலத்திற் கேற்ப புதிய சொற்களையும் உருவாக்க வல்லது.

தமிழா விழி! அதுவே உன் விழி! மொழி!!!

-குமணராசன்,

மும்பை