எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, நான் கல்லூரி வாழ் நாளில் தந்தை பெரியாரின் ஆன்மீக எதிர்ப்பு - சமூகப் புரட்சி, அரசியல் எதிர்ப்பு நிலை பெண்கள் முன்னேற்றக் கட்டுரைகளை விரும்பி, ‘விடுதலை'யில்தினமும் படிப்பேன். காலச் சூழ்நிலை யில் முரசொலி மட்டும் படிப்பேன். இன்று பல (‘தினமணி', ‘தமிழ் இந்து', ‘தினமலர்')  நாளிதழ்களையும், வாரநாள் சிறப்பிதழ் களையும் படித்து வருகிறேன். அரசியல் என்பது எனது வாழ்க்கை, அது சமுதாய எழுச்சி, பொருளாதார முன்னேற்றம் என்பதைப் பற்றியது.

செய்திக்கு வருகிறேன்

அன்றைய விடுதலைக்கும், இன்றைய ‘விடுதலை'க்கும் சிறப்பு என்னவென்றால் அனைத்து செய்திகளையும் பார்க்க, படிக்க, செய்தியை தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக அரசியல் அதிகார ஆதிக்கத்தில் உச்சத்தில் சர்வாதிகாரப் போக்கில் நாட்டை முதன்மைப்படுத்தும் மதவாத, இந்துத் துவா அரசின் ஏகபோக குத்தகைதாரர் நரேந்திர மோடி என்பதை ‘விடுதலை' நாளிதழ் மூலம் வாசகர்கள் நன்றாகவே தெரிந்துகொள்ள முடிகிறது.

மேலும் தங்களுடைய வாழ்வியல் சிந்தனைகள் நூல்களை படிக்கத் துவங்கியுள்ளேன். என் நிலையை என்னால் உணர முடிகிறது. இந்நூல் எதிர்கால தமிழ் மக்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையாக திருக்குறள் போல் விளங்கும் என்பதில் எனக்கு அய்யமில்லை.

85ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் ஆசிரியர் அய்யா விற்கு எனது வாழ்த்தை, உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

என்னைப்போன்றவர்களை மீண்டும் ‘விடுதலை' வாசகர் களாக மாற்றிய எனது நண்பர் உரத்தநாடு குணசேகரன் அய்யாவிற்கு நன்றி கூறி. என் கடிதத்தை இறுதி செய்கிறேன்.

- வி.எஸ்.இளங்கோவன்

வாள் அமர்கோட்டை (தஞ்சை மாவட்டம்)