எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென்னாட்டின் சாக்ரடீஸ் இந்நாட்டின் இங்கர்சால் - பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் மறைவிற்கு பிறகு “இந்த இயக்கம் இருக்குமா - இயங்குமா” என்று விழியைச் சுளித்தவர்கள் மத்தியில் மாற்றாரும் வியக் கும் வண்ணம் இயக்கத்தை கண்ணிலும் மேலாக கட்டிக்காத்து வருபவர் மானமிகு ஆசிரியர். அய்யா அவர்கள்,

அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் நீதித் துறை எதுவாக இருப்பினும் அஞ்சாது அயராது முதன் முதலாக கருத்துகளை எடுத்துரைத்து நாட்டிற்கு நலனையும், இயக்கத்திற்கு பெருமையையும், ஒருசேர சேர்ப்பவர் தமிழர் தலைவரே!

இயக்கத்தின் வரலாற்றுப் பெட்டகமாம் ‘விடுதலை’ நாளேட்டினை பெருத்த நட்டத்திற்கு இடையிலும், தொடர்ந்து தொய்வின்றி வெளிவருவதற்கு முனைப் பான முயற்சியினை மேற்கொண்டு வெற்றி வாகையை சூடியவர் தமிழர் தலைவரே.

தந்தை பெரியார் இயம்பிய வண்ணம் “மனிதன், தானாகப் பிறக்கவில்லை. தனக்காகவும், பிறக்கவில்லை” என்ற கருத்திற்கு இலக்கணமாய் திகழ்பவர் தமிழர் தலைவர் மட்டுமே.

பள்ளிப்பருவம் முதல் இன்று வரை, விதையாய் விழுந்து பேச்சாலும், செயலாலும் தொ ண்டறம் கொண்ட - கண்ட தமிழர் தலைவர் அவர்கள், இயக்கத்த வர்களின் இதயத்தில் நீக்கமற நிறைந்திருப்பது வியப் பல்லவே!

தாழ்ந்த தமிழகம் தலைநிமிர தமிழர் தலைவர், முத்துக்குள் கடலாய், முதுபெரும் தலைவ ராய் நீடூழிவாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

- இரும்பொறை (எ) ச.பிச்சை

மணப்பாறை கழக தலைவர்,

திருச்சி மாவட்டம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner