எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்விக்கடன் வட்டி குறைப்பு சம்பந்தமாக

என் பேரன் விஸ்வநாத் வறுமையிலும், திறமையாகப் படித்து +2 தேர்வில் 1132 மதிப்பெண்கள் பெற்று தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பிரிவில் சேர்ந்தான் (2014ஆம் ஆண்டிலிருந்து). தற்போது இறுதியாண்டு படித்து வருகிறான்.

வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தருவதாக பல்வேறு கல்வியாளர்களும், வங்கிகளும் அறிவித்தன. ஒருபடி மேலே போன முக்கிய அரசியல் கட்சியினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடனை முழுமையாக, நாங்களே செலுத்துவோம் என்று அறிவித்து நம்பிக்கை அளித்தனர். நாங்களும் அவற்றையெல்லாம் நம்பி, என்னுடைய பேரன் விஸ்வநாத்திற்கு ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்தியன் வங்கி கிளையில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 4 தவணைகளில் ரூ. 65,000 வீதம் மொத்தமாக ரூ. 2.60 லட்சம், கல்விக்கடனாகப் பெற்றோம். கடந்த வாரம் எனது மகளும், பேரன் விஸ்வநாத்தும் வங்கி மேலாளரை சந்தித்து, கடனை திருப்பிச் செலுத்துவது பற்றி விசாரித்தபோது, கடன் வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை வட்டி மட்டும் ரூ. 50 ஆயிரம் ஆகிறது. கடன், வட்டி இரண்டும் சேர்த்து ரூ. 3.10 லட்சம் ஆகிறது என்று கூறி திகிலடையச் செய்தார். வட்டி விகிதம் 11.5%  என்றும் கூறினார். இது கந்து வட்டி என்பதைப் போல. எதிர்காலத் தூண்களான லட்சக்கணக்கான, கல்விக்கடன் வாங்கிய மாணவச் செல்வங்களின் குடும்பங்கள் கண்கலங்கி என்ன செய்வது என்று புரியாது உள்ளனர். இன்னும் என் பேரன் இறுதியாண்டு முடிக்காத நிலையில் இக்கல்விக் கடனானது பெரும் கவலை அளிக்கிறது.

மேலும் தற்போது படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போன்ற நிலையாக உள்ளது.

தாங்கள் இப்பிரச்சினை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்து, தக்க ஏற்பாடு செய்தால் பல்லாயிரக்கணக்கான மாணவச் சமுதாயத்தினரும், அவர்தம் பெற்றோரும் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு நன்றி செலுத்தி வாழ்த்துவார்கள். நன்றி! வணக்கம்!

- துடுப்பதி கிருஷ்ணன்

பட்டாபிராம், சென்னை-72

குஜராத் சட்டசபைத் தேர்தல்:

காங்கிரசு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

அகமதாபாத், டிச.5 குஜராத் மாநி லத்தில் நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரசு கட்சி நேற்று (4.12.2017) வெளியிட்டது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

குஜராத் மாநில சட்டசபைக் கான தேர்தல் அறிக்கையை காங்கிரசு கட்சியினர் நேற்று வெளியிட்டனர்.