எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகம்மையார் இல்லத்திற்கு

நன்கொடை அளிக்கும் உள்ளங்கள்

திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு எங்கள் குடும்பத்தினரின் மணநாள், பிறந்த நாள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை அளித்து மகிழ்வதுடன், அதனை ‘விடுதலை’யிலும் பிரசுரிக்கப்படுவதைப் பார்த்து எனது சுற்றத்தார்களும், நண்பர் களும் அதனைத் தொடர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை அளித்து வருகிறார்கள்.

எனது மகன் பெரியார் லெனின் உடன் கல்லூரியில் படித்தவரும், திண்டுக்கல் மாவட்டம், தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் பிறந்தவரும், தற்போது கத்தார் நாட்டில் வேலை செய்துவரும் பொறியாளர் போ.சிவபிரகாஷ் - மணிமேகலை வாழ்விணையர்களின் 10 ஆவது மணநாளை முன்னிட்டும் (13.12.2017), அவர்களது மகன் சி.துசாந்தன் 8ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் நமது காப்பகத்திற்கு ரூ. 5000/- அனுப்பியுள்ளனர் என்பதைத் தெரிவிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். மேற்படி பணத்தை காப்பகம் வரவுக்கு பணபரிமாற்றம் செய்திருக்கிறேன்.

- போடி ச.இரகுநாகநாதன்

தேனி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

 ஈரோடு - பெரியார் அண்ணா நினைவக காப்பாளரின் கடிதம்

தாங்கள் தங்களின் 85ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு ஈரோடு வருகை தந்தபோது (2.12.2017) ஈரோட்டில் உள்ள பெரியார் - அண்ணா நினை வகத்திற்கு வருகை தந்தீர்கள். அப்போது தங் களால் தங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியான - நினைவகத்தில் இல்லாத நூல்களை வழங்கக் கேட்டிருந்தோம். அதனை ஏற்று ரூ. 4000/- மதிப்பிலான 46 நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தீர்கள். அதற்கு நினைவகப் பணியாளர்கள் அனைவரின் சார்பிலும் எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தங்களால் வழங்கப்பட்ட நூல்கள் நினைவக நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நினைவக நூலகப் பதிவேட்டில் தொகுதி 2இல் பக்கம் 17 முதல் 23 வரையில் வரிசை எண். 577 முதல் 622 வரையில் பதிவு செய்யப்பட்டு செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களின் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நூல்கள் அனைத்தும் இங்கு பயில வரும்ஆய்வுமாணவர்களுக்குமிகவும்பயன் படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள் கின்றேன். சில மாணவர்கள் இங்கு தங்களுக்குத் தேவைப்படும் குறிப்புகளைப் பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்பதையும், அவர்கள் ஆய்வு நூலின் பிரதிகளை வழங்கியும் உள்ளனர்.

இதுவரையில் தங்கள் மூலம் இந்நினைவக நூலகத்திற்கு ரூ. 32,350.25 மதிப்பிலான 517 புத்த கங்களும், ரூ. 100 மதிப்பிலான 2 ஒலி நாடாக்களும் - சிடி வழங்கியுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நூல்களை (பெரியார் பிறந்த நாள் மலர்களை) கடும் முயற்சியின் மூலம் பெற்றுத் தந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

மேலும், நாங்கள் சில புகைப்படங்கள் வேண்டி பொதுச் செயலாளர் அவர்களிடம் பட்டியல் தந்துள்ளோம். அதனை எங்களுக்கு வழங்கிட பெருமுயற்சி எடுத்து அதனை விரைவில் அனுப்பி வைத்திட முன்வந்துள்ள பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி!

- அ.பொன்முகிலன்

காப்பாளர், பெரியார் அண்ணா நினைவகம்,

ஈரோடு

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner