எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

"விடுதலை" (வெளியூர் - 17.12.2017) நாளேட்டில் கலி.பூங்குன்றனின் "ஹாதியா ஒரு குறியீடு" என்ற தலைப்பில் சிறப்பான கட்டுரை படித்தேன்.

ஹாதியாவின் நிலையை ஒரு மனக்குமுறலோடு எழுதியுள் ளார்கள். நீதிமன்றம் தடுமாறினால் எங்கே போய் முட்டுவது என்பது சரியான கேள்வி.

ஒரு பழமொழி உண்டு. "பெண் சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். கங்கையே சூதமானால்?"

இதே கருத்தை "சமரசம்" (16-31 டிசம்பர்) இதழில் துணை ஆசிரியர் வி.எஸ்.முகமது அமீன், "மனித உரிமையின் குரல்" என்ற தலைப்பில் அகிலா என்ற ஹாதியா பிறந்து வளர்ந்தது  முதல் இஸ்லாத்தில் பற்றுக் கொண்டு அதனால் ஒரு முஸ்லீம் இளைஞனுடன் திருமணம். அதன் மீது பெற்ற தகப்பனாரால் காவல்துறை, நீதிமன்றம் என்ற நிலை -அதனால் டில்லி நீதிமன்றம், எவ்வளவு அலைக்கழிப்பு?

24 வயது கொண்ட, மருத்துவத்திற்கு படிக்கும் பெண் நிலைமை நம் நாட்டில் மதம் என்ற பெயரில் நாட்டிற்கே ஒரு சவால்.

மதம் என்கின்ற வெறி நாட்டில் என்று குறையப் போகிறது, மனிதர்கள் எல்லாம் ஒரு குலம் என்ற நிலை என்று வரப்போகிறது?

ஜீவா, பெரியார் காலத்திலிருந்து இன்று அதிகமாக மதமானது வீரியமாக சமுதாயத்தை அலைக்கழிக்கிறது.

ஜாதி என்கின்ற பாம்பு, தன் கொடிய நாக்கை நீட்டிக் கொண்டி ருக்கிறது. என்றைக்கு ஜாதி என்ற பெயர் நீக்கப்படுகிறதோ அன்று தான் விடிவுகாலம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி யில் உயர் ஜாதியினரை விட மேலோங்கிப் படிக்க உறுதி எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.

இடஒதுக்கீடு என்ற நிலையில் பல தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை வாய்ப்பில் மனிதர்களாக வாழும் நிலை.

நம் பிள்ளைகள் மேல் ஜாதி மாணவரை விட ஒழுக்கத்திலும், அறிவிலும் சிறப்பானவர்களாக வேண்டும் என்று பள்ளிகளில் மாணவர்கள் இடத்தில் பேசுகிறேன்.

ஒழுக்கம் நிறைந்தவன்தான் மேல் குலம், ஒழுக்கம் இல்லாதவன் மேல் ஜாதி ஆனாலும் கீழ்பிறப்பைச் சார்ந்தவன் என்று பேசி, அவ்வாறு ஒழுக்கமுடன் இருப்பீர்களா என்று கேட்டால் இருப்போம் தாத்தா என்று மாணவர்கள் கூறும்பொழுது பெரிய மகிழ்ச்சி!

அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது. ஆகவே எதிர்கால மாணவர் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை ஊட்ட வேண்டும். உறுதியாக வெற்றி பெறும். நம்பிக்கையோடு செயல் பட வேண்டும். செயல்படுகின்றேன். பெற்ற தாய், தகப்பனார், ஆசிரியர் காட்டும் நல்வழியின்றி வேறு இல்லை என்று கூறுகிறேன், சிந்திக்க வைக்கிறேன், பலனை பொறுத்திருந்து பார்ப்போம்!

- இரா.சண்முகவேல்,

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner