எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசிரியருக்குக் கடிதம்

புதுச்சேரியில் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு தேவை

 

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற முதல்வர்நாராயணசாமிஅனைத்துக் கட்சித்தலைவர்களுடன்டில்லிசென்று மத்திய அரசை வலி யுறுத்த வேண்டுமென ‘மக்கள் உரி மைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘நீட்’ தேர்வினால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘நீட்’ தேர்வினால் ஏழை மாணவர்கள் மருத் துவராகும் கனவு கலைந்து போயுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில்இரு சட்ட முன் வரைவுகளை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்குப் புதுச்சேரி அரசு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 3 ஆயிரம் பேர், மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ஆயிரம் பேர்என மொத்தம் 15 ஆயிரம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதுகின்றனர். ‘நீட்’ தேர்வில் முழுக்க மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள்கேட்கப்படுவதால்மாநி லப் பாடத்திட்டத்தில் பயிலும் மாண வர்கள் தேர்ச்சிப் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

‘நீட்’ தேர்வு இந்த ஆண்டு மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும் என அறிவித் துள்ளார்.

புதுச்சேரியில்5ஆம்வகுப்பு வரையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத் திலும், 6ஆம் வகுப்பு முதல் மாநிலப் பாடத்திட்டத்திலும் கல்விப் பயிற்றுவிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இது புதுச்சேரி மாணவர்கள் இடையே பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, முதல்வர் நாராயணசாமி உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று மத்திய அரசை அணுகி ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கோ. சுகுமாரன்,

செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி