எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

10ஆம் தேதி இரவு ஜீவா படிப்பக 30ஆம் ஆண்டு விழா ஒளி - ஒலிப்பேழையை போட்டுப் பார்த்தேன். 3 மணி நேரம் ஓடுகிறது. அதில் எல்லோருடைய பேச்சு களும் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. அதில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேச்சு மிகச்சிறப்பாக அமைந்துவிட்டது.

10ஆம் தேதி மதுரை சென்றிருந்தேன். மீனாட்சி அம்மன்‘கிருபை'யால்வணிகவளாகங்கள்மூடப் பட்டிருக்கும் காட்சி! தெய்வத்தை வணங்குகின்றவர் களுக்கு சிறப்பான தண்டனை. தீப்பிடித்து வேகும் பொழுது ஆண்டவன் பார்த்து சிரிக்கும் காட்சி! இதற்கு மேலும் தெய்வத்தை நம்பி இன்னும் வாழ்ந் தால் அதைவிட மூடத்தனம் ஒன்றுமில்லை. நீதி செத்துவிட்ட நாட்டில் நீதிபதியே கடைகளைத் திறக் கக்கூடாது என ஆணையிட்டால், இது ஒரு நாடல்ல.

அதே நேரம் பி.ஜே.பிக்காரர்கள் விளம்பரம் பார்த்தேன். திராவிட ஆட்சி தேர்ந்தெடுத்த ஆணையரை குற்றம் சுமத்தி அழகு பார்க்கிறது. தீ விபத்தே ஒரு சதித்திட்டம் என்றும் கூறியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் நிற்கும் காட்சி. எதையும் கண்டு கொள்ளாமல் பலர் தன் கதையை பார்த்துக்கொண்டுசெல்லும்காட்சியையும்பார்த் தேன். எத்தனையோ பேர் சாப்பாட்டிற்கும், பெற்ற பெண்ணை கட்டிக்கொடுக்காத நிலையில் வாழ்பவர்கள் மத்தியில் கொழுத்த பார்ப்பனர்கள் ஆலயத்தையே தனதாக்கி பழைய காலம் போல் தாழ்த்தப்பட்டவனை உள்ளே அனுமதிக்க மாட்டார் கள். இந்த நிலையை அனைத்து மக்களும் சிந்திக்க வேண்டும்.

அதையேதான் ஜீவா படிப்பகம் 30ஆம் ஆண்டு விழாவில் நீங்கள் (கவிஞர்) சுதந்திரம் பெற்ற நாட்டில் சாதி இருக்கலாமா? சாதி இருந்தால் உண்மைச் சுதந்திரமா என்ற கேள்வியைக்கேட்டு சிந்திக்க வைத்தீர்கள்.

மதுரை நகரமே பொங்கி எழ வேண்டாமா? இந்த கொள்ளையிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது என்றால் நாடு எப்படி நாடாகும்?

ஏகப்பட்ட காவிக்கொடிகள் பறக்க ஆரம்பித்து விட்டன திராவிடர் கழகம் தவிர அனைத்து இயக்கங்களும் அறிக்கையோடு தம் கடமையை முடிக்கின்றன.

‘நீட்' தேர்வைப்பற்றி அழகாக விளக்கினீர்கள்! மே 6ஆம் தேதி ‘நீட்' தேர்வு என்ற செய்தி, ‘நீட்' தேர்வு வைத்தால் 12ஆம் வகுப்பே தேவையில்லை.

இதில் அனைத்து மாநிலங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றியும் குடியரசுத் தலைவர் கவனத்திற்குச் செல்ல வில்லை என்றால் மந்திரிசபை என்ன செய்து கொண்டிருக்கிறது? திட்டமிட்டு அடிப்பது போல் அடிப்பேன். அழுவது போல் அழு என்ற கதை நடந்து கொண்டிருக்கிறது.

எல்லா மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் இருக் கின்றன. மாநில இயக்கங்களை இணைத்து ஒரு முடிவு காணாவிடில் ‘நீட்'டிற்கு படிப்பவன் வெற்றிபெற்று தன் வாழ்க்கையில் சிறப்படைந்து விடுவான். இதை நம்பி இருப்பவன் போராடிய இயக்கங்களை குறை சொல்லுவான்.

பார்ப்பன ஆதிக்கம்மறுபடியும் மனுதர்மத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது. பெரியாரின் சிந்த னையை தோல்வி அடையச்செய்ய திட்டமிட்ட சதி நடக்கின்றது.

எல்லா விழாக்களும் நம்மவர்கள் இன்றும் மந்திரத்தைக் கடைப்பிடித்து, அந்த வேதத்தவரை அழைத்து நடத்தும் நிலை மாறவில்லை.

அனைத்து மக்களும் சிந்தித்து அதனை நிறுத்த வேண்டும்.

மதுரையை சுற்றிப்பார்த்தாலே உழைக்கும் மக்கள் ஒரு புறம்; ஊதாரித்தனமாக, பொழுது போக்காக ஆலயம் முன்பு நபர்கள் நிற்கும் காட்சியைப் பார்த்து என்று இவர்கள் மாறுவார்கள் என்ற எண்ணம் மனதில் எழுந்தது!

தாயத்து, மந்திர கயிறு கையில் போடும் மந்திரம், கைரேகை சாஸ்திரம், பட்சி சாஸ்திரம் எத்தனை வேடிக்கைகளைப் பார்க்கிறேன். எவ்வளவுதான் பேசினாலும் படித்தவர் மத்தியிலே சிந்தனையே வரவில்லை.

சுதந்திரம் அடைய வேண்டும் என்று போராடிய தலைவர்களையெல்லாம் மறைத்துவிட்டார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை கிடைத்தது என்றாலும் அதுவும் இப்பொழுது தடைசெய்யப்பட்டு வருகிறது.

மேலும் அத்தனை மக்களும், பிள்ளைகளும் கையில் மஞ்சள் துணிகட்டிக் கொண்டும், சிவப்பு சேலைகளை கட்டிக்கொண்டும், நெற்றி முழுக்க திருநீர் பூசி ஒரு நம்பிக்கையோடு திரியும் காட்சி, அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது அங்கு நடக்கும் உயிர்பலிகளை யாரும் சிந்திப்பதே இல்லை.

இன்னும் மறுபிறவி, செய்தவினை என்று சொல்லி தன்னை திருப்திபடுத்தி வாழும் மக்கள்! எத்தனை பகுத்தறிவைச் சொன்னாலும் ஆமாம் என்று ஒத்துக்கொள்கிறார்கள்; திருந்தவில்லை.

ஆன்மிக சாமியார், மதத்தவர்கள் செய்யும் அயோக்கியதனத்தை ஒத்துக்கொண்டாலும் திருந்த வேயில்லை.

எத்தனை மனிதர்களிடம் பகவத் கீதை நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது என்று விளக்கம் சொன் னால் உண்மைதான் என்கிறார்கள், திருந்திய பாடில்லை.

கற்றும் கல்வி சரியில்லை. விஞ்ஞானத்தை சொல் லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் வாங்கும் காசுக்காக ஏதோ மனப்பாடம் செய்து போதிக்கும்நிலை.

நாம் நியாயமாக வாழ வேண்டும் என்ற எண்ணம், நமது நடைமுறை அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

- இரா.சண்முகம்வேல்

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner