எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘விடுதலை' 24.2.2018, 26.2.2018 ஆகிய நாட்களில் வெளிவந்த ஆசிரியர் அவர்களின் "வாழ்வியல் சிந்தனை" கட்டுரைகளான "முதுமையும், முதிர்ச்சியும்: ஒரு விளக்கம்" மிகவும் அற்புதமாக இருந்தது. முதுமைக்கும், முதிர்ச்சிக்கும் என்ன வேறுபாடு என்பதை அருமையாக ஆசிரியர் விளக்கியிருந்தார்.

1) முதுமை என்பது நம்மால் தவிர்க்க முடியாதது. எதை தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழக வேண்டும் - இன்முகத் துடன்!

2) முதுமை நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இயற்கை நம்மீது திணிக்கும் கட்டாயக் காதல்தானே! வேறு வழிஇல்லையே!

3) ஆனால் முதிர்ச்சி என்பது அப்படி அல்ல - அது முதுமையடைந்தாலே தானே கதவைத் திறந்து கொண்டு வருவதல்ல - முதிர்ச்சி என்பது நமது பண்புகள், பழக்கங்கள் மூலம் செதுக்கிப் பொலிவும், வலிவும் பெற வேண்டிய ஒரு அருங்குணம்! முதிர்ச்சி உடையோர் என்றும் - இகழ்ச்சிக்கு ஆளாகார்.

உதாரணத்திற்காக ஆசிரியர் இதைக் குறிப்பிடுகிறார்.

"அட்சய திரிதியில் பவுன் வாங்கினால் பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி தேவையின்றி பவுன் வாங்கலாமா? இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே!" என்று பகுத்தறிவு ஒளி பாய்ச்சுகிறார்.

மேற்கண்டவாறு கட்டுரை முழுவதும் ஆசிரியர் அருமை யாக, அற்புதமாக எடுத்துரைத்தார்.

இவை முதியோர்கள் மட்டுமின்றி முதிர்ச்சி பெற நினைப் போர் அனைவரும் அவசியம் படித்துப் பயன் பெறவேண்டிய கட்டுரைகளாவன!

இறுதியாக, எதுவும் நம் கைகளில்தான், எதுவும் நம் முடிவில்தான் என்று தன்மானச் சுடர் பாய்ச்சிக் கட்டுரையை முடிக்கிறார்.

‘விடுதலை'யில் வெளிவரும் ஆசிரியரின் ‘வாழ்வியல் சிந்தனைகள்' ஒவ்வொரு மனிதனின் வீட்டிலும் குடும்ப விளக்கு - இல்லற பகுத்தறிவு ஜோதி - அணையா சுயமரியாதைச் சுடர்!

வாழ்க பெரியார்! வெல்க விடுதலை!

- தி.க. பாலு, திருச்சி-2

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner