எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இன்றைக்கு வெளியாகும் தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களிலும், அறிவுக்கு புறம்பான ஆன்மீகச் செய்தி களை வெளியிட்டு, ராசிபலன் மற்றும் மூடநம்பிக்கை கோயில் விழாக்களை விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்து பணம் ஒன்றே குறிக்கோளாய் நடத்தி வருகின்றன. இதைப்போல் ஊடகங்களும் மூடநம்பிக்கை  செய்தி களுக்கு முழு விளம்பரம் கொடுத்து மக்களின் மூளையில் போட்டுள்ள விலங்கினை அகற்ற விடாமல் தடுத்து வருகின்றன.

அனைத்து பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் அறிவு நாணயம் இருந்தால் பகுத்தறிவு செய்திகளுக்கு நேரம் ஒதுக்கி, பகுத்தறிவு மலர் என பிரசுரித்து மக்களுக்கு அறிவுப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யத் தயாரா?

இதிலிருந்து விலக்கு கொண்ட நாளிதழ்கள் "விடுதலை"யும், "முரசொலி"யும் மட்டும் தான்.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான "விடுதலை" தன் கொள்கை இலட்சியத்தை - விடாமல் மக்களிடம் அறியாமை நீங்க - பகுத்தறிவு சூரியனாய் பகுத்தறிவு ஒளி என்றும் பரப்பிக் கொண்டேயிருக்கும்.

"விடுதலை" படியுங்கள் வீறுகொண்டு எழுவர்!

"விடுதலை" படியுங்கள் வீரமிக்க பகுத்தறிவாளர் களாக திகழ்வர்!

"விடுதலை" படியுங்கள் எவரின் சவாலையும்

எத்தகையோரின் விவாதங்களையும் சந்திக்கும் வலிமை படைத்த தீரர்கள் ஆவீர்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வெல்க விடுதலை!

- திண்டுக்கல் தி.க.பாலு

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி