எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

விடுதலை' (26.3.2018) நாளிதழில் வெளிவந்த ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையான "நன்றியை எதிர்பார்க்காதீர்!" என்கிற கட்டுரையில் உள்ளவாறு - அன்றே தந்தை பெரியார் தமிழர்களைப்பற்றி எவ்வளவு தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார்!

"1933இல் குடிஅரசு' தலையங்கம் ஒன்றில் தந்தை பெரியார் எழுதிய சில வரிகள் - காலத்தாலும் அழிக்கப்படமுடியாத கருத்துரைப் பெட்டகமாகும்.

'நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய - பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்;  எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்.'     - தந்தை பெரியார்

நமது இயக்கம் நன்றியை எதிர்பார்க்காத தொடர் பணி ஜிலீணீஸீளீறீமீ யிஷீதீ - என்ற தத்துவத்தை உட்கொண்டு இயங்குவது என்று தந்தை பெரியார் கூறினார்."

அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மேற்கண்டவை இன்றும் உண்மை என்பதற்கு - இரண்டு எடுத்துக் காட்டுகளை ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை களைப் படிக்க, படிக்க உள்ளத்தில் படிந்திருக்கும் கொஞ்ச, நஞ்ச இருள் வெளியேறி, அழுக்குகள் அகற்றப்பட்டு உள்ளம் தூய்மை அடைகிறது.

உலகத்தில் அற்புதமான இயக்கம் நமது இயக்கம் - திராவிடர் கழகம். எவ்வித பிரதி பலனும் எதிர்பாராமல் சமுதாய நலன் ஒன்றே - குறிக்கோள் எனப் பாடுபடும் ஒப்பற்ற இயக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கட்டுப்பாடுமிக்கத் தொண்டனாகப் பணிபுரிவதை விட நமக்கு வேறு என்ன பெருமை உள்ளது?

இறுதியாக கட்டுரையில் - "நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு! என்றும் சொன்ன பெரியார் மக்களை எப்படித் தன் அறிவுத் தராசில் சரியாக எடை போட்டுள்ளார். பார்த்தீர்களா!" என்று முடிக்கிறார். ஆவணங்களைப்போல பாதுகாக்க வேண்டியவை ஆசிரியரின் அற்புதமான "வாழ்வியல் சிந்தனைகள்"

- திண்டுக்கல் தி.க.பாலு,

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்,

திருச்சி-21

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner