எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஒவ்வொரு "விடுதலை" ஞாயிறு மலர் வந்ததும் அவற்றை ஆர்வத்துடன்எடுத்து ஒரு செய்தி வந்துள்ளதா? என்பதை தேடிப்பார்த்து, படித்து மகிழும் பழக்கம் எனக்குண்டு. அந்த செய்தி என்னவெனில் பெரியார் பெருந்தொண்டர்களின் நேர் காணல் தான் அந்த செய்தி. அவர்கள் தங்கள் இளம்பருவத்தில் எப்படி இந்த இயக்கத்தால், தந்தை பெரியாரின் தத்து வத்தால் ஈர்க்கப்பட்டோம்; அதற்கு யார் துணையாக இருந்தார்கள்; எந்த புத்தகம். எந்த செய்தித்தாள் காரணமாக இருந்தது, கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத் தும்போது தனது குடும்பத்தில் தொடங்கி, உற்றார் - உறவினர்கள், நண்பர்கள், ஊரார் மத்தியில் தான் எப்படியெல்லாம் வெறுக் கப்பட்டேன்; ஒதுக்கப்பட்டேன்; தண்டிக் கப்பட்டேன் என்றெல்லாம் சொல்லும் போதும்...

கழக செயல்பாடுகளில் கலந்து கொண்டது; பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தபோது ஏற்பட்ட இன் னல்கள்; எதிரிகள் ஒரு பக்கம் என்றால் நம்மவர்களே கொடுத்த தொல்லைகள்; இயக்கம் நடத்திய போராட்டங்கள் - அவற் றில் கலந்துகொண்டு இன்முகத்துடன் சிறை சென்றது; தண்டனையை வலிய சென்று ஏற்றது என தனது கரடு முரடான வாழ்க்கைப்பாதையை, கொள்கைப் பாதையை, தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சர்வபரி தியாகங்களை செய்ததை அந்த வரலாற்றை அவர்கள் கூறுவனவற்றை படிக்கும்போதும்...

அந்த கருப்பு மெழுகுவர்த்திகளின் உழைப்பை படிக்கும்போதும் மெய்சிலிர்க் கும். அவர்களின் கடும் உழைப்பால், தியாகத்தால் தான் இன்றைக்கு நாம் கை நிறைய ஊதியம் பெறுகிறோம். அது மட்டுமின்றி, பச்சை மையால் கையொப் பமிட்டு பலருக்கு ஊதியம் பெற்று வழங் கும் அலுவலராக உயர்ந்த வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்ற உணர்வு மேலோங்கும்.

அவர்கள் அளவிற்கு இல்லையென் றாலும் இந்த இயக்கத்திற்காக நம்மால் இயன்ற அளவு உழைக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. தொண்டு என்பது இயக்கப்பணியே என்ற உணர்வு ஏற்படுகிறது.

அவ்வப்போது இயக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகள், துரோகங்களால் தாங்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் தலைமை, இயக்கம், கொள்கை, தொண்டு என உறுதியாக இருந்ததை படிக்கும்போது எம்போன்ற இளைஞர்களுக்கு அது பாடமாக அமைகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் (8.4.2018) அன்று மலர் முகப்பில் "இதோ ஒரு வீர பத்திரன்" என்ற தலைப்பைப் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்வுடன் உள்ளே படித்தேன். பூரிப்பாக இருந்தது. நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் அய்யா அவர்களை நீண்ட நாட்களாக தெரியும். வடசென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய அய்யா தட்சிணாமூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள். அன்று முதல் இன்று வரை எல்லா மாநில நிகழ்வு களிலும் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பை பெறுகிறோம். அவரைப்பற்றிய இதோ ஒரு வீர...பத்திரன் என்று நமது கவிஞர் அவர்களால் எடுக்கப்பட்ட பேட்டியை படித்து மேலும் அவரின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொண்டோம்.

அய்யா அவர்களுக்கு எண்பது வயதா? நம்ப முடியவில்லை. பெரியா ரியலை வாழ்வியலாகவும், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை வழிகாட்டி யாகவும் ஏற்றவர்கள் வாழ்வார்கள்; நீண்ட காலம் வாழ்வார்கள், மகிழ்வோடு வாழ் வார்கள்! நாங்களும் வாழ்த்துகிறோம்!

நூற்றாண்டு விழா காண்பார்; தமிழர் தலைவரே கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்துவார் என்ற நம்பிக்கையுடன்...

- அண்ணா.சரவணன்

மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

மத்தூர்