எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.4.2018 அன்று உலக புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்தக சங்கமத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆற்றிய உரை முத்தமிழ் முத்துக்கள் போல், முழுநிலவு போல் பகுத்தறிவு ஒளி பாய்ச்சியது. உரையின் துவக்கத்திலேயே பெரியார் திடலுக்கு வருவதே ஒரு பெருமை - அதில் நின்று நிலை கொண்டு பேசுவது வலிமை என உள்ளத்தின் உணர்வுகளை திறந்து வைத்தார்.

அவர் உரை முழுவதும் இலக்கிய உணர்வுமிக்க பகுத்தறிவு சிந்தனைமிக்க எழுச்சி மிக்க உரையாக இருந்தது.

தொடர்ந்து பல புதிய செய்திகளையும், புத்தகங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை ஆய்வுரையாக அழகாக படம் பிடித்துக் காட்டினார்.

பக்தி அறிவு என்பது தீர்மானிக்கப்பட்ட முடிந்து போன ஒரு அனுமானம் - பகுத்தறிவு என்பது அப்படியல்ல - இந்த நிமிடத்திற்கு இது உண்மை - இதனினும் பெரிய உண்மை சிந்தித்தால் தோன்றும் என்பது பகுத்தறிவு. இது முடிந்து விடுவதல்ல - அறிவு முடிவதல்ல - பக்தி முடிவது என்று அழகாக படம் பிடித்து காட்டினார்.

அவர் உரை முழுவதும் பெரியார் திடலுக்கு வந்ததும் புத்துணர்ச்சியை எழுச்சிமிக்க சிந்தனை உரையாகவும் அமைந்து விட்டது. உரையை முடிக்கும் போது எங்களுக்கு தீயோ - மானமோ - வீரமோ குறைந்தால் பெரியார் திடல் என்ற களம் - களஞ்சியம் இருக்கிறது. இங்குவந்து இரவல் பெறுவோம் - வாழ்க பெரியார் என்று அற்புதமாக முடித்தார்.

பெரியார் திடலுக்கு வந்தால் வைரமுத்துவைப் போல் பல வைரமுத்துக்கள் இன எழுச்சியும், பகுத்தறிவு சிந்தனையும் பெறுவர். தமிழர்கள் அனைவருக்கும் தமிழர்களின் பாதுகாப்பு அரண் பெரியார் திடல் தான்.

- தி.க.பாலு

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்

திருச்சி.