எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகப்பெரும் சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்களின் அறிவியல், பகுத்தறிவுக் கருத்துகளை உலக மாந்தர்களின் சிந்தனைக்கு விருந்தாக அல்ல விதையாக பசுமரத்தாணி போன்று பதியமிட்டு நாளும் பணியாற்றி வரும் தமிழர் தலைவர் தமிழ்த்திரு. ஆசிரியப் பெருந்தகையாளருக்கு க.ப.சண்முகம் என்கின்ற எளியவனின் வணக்கங்கள் பல. என்னுடைய அகவை 78 தொடக்கம்.

விடுதலை, உண்மை இதழ்களை கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிற்கு வரவழைத்து விரும்பி வாசித்து வருபவன். 3.5.2018 நாளிட்ட விடுதலை படித்தேன். நான்காம் வகுப்பு படிக்கும் பெரியார்பிஞ்சு தம்பி எஸ்.யோசுவாகின்ஸிலின், ஆசிரியர் தாத்தாவிற்கு என்று தன்னுடைய கைப்பட எழுதிய கடிதம் பிரசுரம் ஆகியிருந்ததைப் படித்து வியந்தேன். தன்னுடைய வகுப்பாசிரியர், சந்திரகிரகணம் எப்படி ஏற்படுகிறது? என்று கேட்கிறார். சந்திரனை, பாம்பு விழுங்குவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது என்று வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கூறுகின்றனர். யோசுவா கின்ஸிலினோ சந்திரனை சூரியன் மறைப்பதனாலேயே சந்திரகிரகணம் ஏற்படுகிறது என்று கூறுகின்றான். சரியான விடை இதுவே என வகுப்பாசிரியர் கூறி யோசுவாவை பாராட்டவும் செய்கிறார்.

இந்த அறிவு நாணயம் யோசுவாசின்ஸிலினுக்கு மட்டும் எப்படி வந்தது? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம். அதற்கு யோசுவாவே விடையும் அளிக்கிறான். விடுதலை, உண்மை இதழ்களை நான் படித்துவருவதாலேயே என்னால் இந்த விடையை சரியாக கூறமுடிந்தது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

இவ்வாறு இன்பத்தமிழ்ச் சிங்கங்கங்களாகிய இளஞ்சிறார்களும் இன்பத் திராவிட இனமாகிய தமிழினத்துப் பெரியவர்களும் அறிவூற்றம் பெறுவதற்கு விடுதலையையும், உண்மையையும் தொடர்ந்து வெளியிட்டு நம்மையெல்லாம் நாளும் புதுப்பித்துக் கொள்வதற்கும், உயிர்ப்பித்துக் கொள் வதற்கும் இன

ஞாயிறு எழுச்சிகோளமாய் இயங்கி நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் போற்றுவோம்! பாராட்டுவோம்! வாழ்த்துவோம்! வளர்க நாளும் அவர்களது ஆயுள், ஓங்குக அவர்களது புகழ்.

- பைந்தமிழ் க.ப.சண்முகம்

கணேசபுரம்,திருச்சிராப்பள்ளி-620014.