எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்ற 28.5.2018 திங்கட்கிழமையன்று எங்கள் அழைப்பை ஏற்று எங்கள் பேரவையில் "வள்ளுவர் குறளும் பண்பாட்டுப் படையெடுப்பும்" என்ற தலைப்பில் மிக அருமையாக ஒரு ஆய்வுரை வழங்கி எங்களுக்கெல்லாம் பல அரிய செய்திகளையும், நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளையும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், அதை அப்படியே வலியுறுத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கருத்துக்களையும் எடுத்துக் கூறி மிக விரிவான ஆழமான கருத்துக்களுடன் ஆய்வுரை நிகழ்த்தியதை அனைவரும் பாராட்டினர். மேலும் மனுநீதி கருத்துக்களையும், பகவத்கீதை கருத்துக்களையும் அவை எப்படி திருக்குறளுக்கு முர ணானவை என்பதையும் கூறியதுடன் ஏராளமான திருக் குறளையும், அதன் மெய்ப் பொருளையும் எடுத்துக் கூறியது மிக மிக பாராட்டத்தக்கதாகும்.

எங்கள் அழைப்பிற்கிணங்கி வந்திருந்து உரையாற்றி எங்களுக்குப் பேருதவியும், பெரு மகிழ்ச்சியையும் அளித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- பழ. மாறவர்மன்

செயலாளர்,

உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner