எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்படும் "சாமி கைவல்யம் முதியோர் இல்லம்" தந்தை பெரியாரின் மனிதநேய சிந்தனையால், அதன் பிறகு ஆசிரியர் அவர்களின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த பெரியார் பெருந் தொண்டர்களது தகுந்த பாதுகாப்பு இல்லமாக பரிமளிக்கிறது. இல்லத்தில் ஒவ்வொருவருக்கும் கொசு வலையுடன் கூடிய படுக்கை கட்டில், சுகாதாரமான கழிவறைகள், குளியல் அறைகள், 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, மின் வசதி, இயற்கை எழில் சூழ்ந்த  சுற்றுப்புறச் சூழ்நிலை, நேரம்  தவறாமல் சிறப்பான உணவு இவ்வளவு வசதிகளுடன் கூடிய கொள்கை மணம் வீசும் முதியோர் இல்லம் வேறு எங்கும் பார்க்க முடியுமா? அங்கு உள்ள ஆசிரியர்  பெரு மக்கள், மாணவிகள் அனைவரும் அன்போடு பழகுகின்றனர்.

அங்கு பணியாற்றும் காவலர்கள் அன்புடன் பழகுகின்றனர். ஆசிரியரின் அன்பான அறிவுரைகள் உள்ள அரிய 'விடுதலை'  அச்சாகும் அச்சகத்தில் முதியோர் அனைவரும் தினமும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரை 'விடுதலை' திருச்சி, தஞ்சை சந்தாதாரர்கள் இதழுக்கு முகவரி ஒட்டிடச் செய்யும் பணியை செய்து வருகின்றனர். இப்பணி எல்லோருக்கும் உற்சாகமாய் உள்ளது.

தினமும் மாலையிலேயே "விடுதலை" படித்து விடுகிறோம். உடலுக்கும், உள்ளத்திற்கும் மன நிறைவான இடமாக அமைந்துள்ளது.

எங்களுக்கும், இயக்க உணர்வு,  தந்தை பெரியாரின் கொள்கை வழி - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கட்டுப்பாடு மிக்க தொண்டறப் பணி - இதுதான் எமது இறுதி மூச்சு அடங்கும் வரையிலான இன்பப் பணி!

வாழ்க பெரியார்!

வளர்க "சாமி கைவல்யம் இல்லம்"

- தி.க. பாலு

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி -21

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner