எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை உட்பட ஏழு நகரங்களில் 237 கோடி ரூபாய் தனியார் முதலீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருக் கின்றன.

நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காஞ்சிபுரம், திருத்தணி, மயிலாடுதுறை, தருமபுரி, நாமக்கல், திருவண்ணா மலை மற்றும் திண்டிவனம் ஆகிய ஊர்களில் நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையங் களை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

குறிப்பாக மயிலாடுதுறையில் தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையம் காமராஜர் முதல்வராக இருந்த போது அமைக்கப்பட்ட தாகும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் பேருந் துகள் உள்ளே நுழைந்து வெளி செல்வ தற்கே இயலாமல் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் நீண்ட நாட்களாக பல்வேறு வழி களில் அரசுக்கு கோரிக்கை வைத்து வரு கின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் கோரிக் கையை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்ட தமிழக அரசு தற்போது புதிய திட்டத்தை அறி வித்துள்ளது. பேருந்து நிலைய கட்டுமானத்திற் கான செலவு முழுவதையும் தனியாரே முதலீடு செய்வர் என்றும் அதன் பின்னர் அந்த பேருந்து நிலையங்களை சுமார் 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனங்களே பராமரிக்கும் என்றும் அரசு கூறுகிறது. பேருந்து நிலையத்தில் நுழைந்தாலே கட்டணம் வசூலிக்கும் திட்டமும் உள்ளதாம்.

முக்கிய சாலைகளில் நீண்ட காலமாக வசூ லிக்கப்படும் சுங்க வரியை   எதிர்த்து ஏற்கெ னவே பொதுமக்கள் கொந்தளித்துப் போயிருக் கிறார்கள்! இந்த நிலையில் மக்களின் பெரும் பயன்பாட்டில் இருக்கும் பேருந்து நிலையங் களையே இப்படி தனியார் வசம் ஒப்படைப்பது சரியா?

இத் திட்டத்தின் மூலம் நகராட்சி அமைப்பு களின் நிதிச்சுமை குறையும் என்கிறது அரசு. அந்த நிதி பொதுமக்களிடமிருந்தே பன்மடங் காக வசூலிக்கப்படும் என்கிற கவலை அரசுக்கு சிறிதளவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்ணா முதல்வராக இருந்த பொழுது தனியார் வசம் இருந்த பேருந்துகளையே அரசுடமையாக்கியவர் அப்போது போக்குவரத் துத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச் சராக இருந்த கலைஞர். இந்தியாவிற்கே இந்த திட்டம் முன்னோடியாக விளங்கியது. இப்போது பேருந்து நிலையங்களே தனியார் வசம் ஒப் படைக்கப்படும் என்கிற அரசின் முடிவை என்னவென்று சொல்வது?

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை இனி பேருந்து நிலையத்தில் நுழைந்தாலே கட்டணமாம்

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner
Banner